மேலும் அறிய

BNYS Course Admission: யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் : எப்போதிருந்து தெரியுமா? முழு விவரம்!

BNYS Course Admission: யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஜூலை 30-ம் தேதி முதல் வ் விண்ணப்பிக்கலாம்' என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் அறிவித்துள்ளது.

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஜூலை 30-ம் தேதி முதல் வ் விண்ணப்பிக்கலாம்' என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் அறிவித்துள்ளது.

இயற்கை வைத்தியம், இயற்கை உணவு என இயற்கை தொடர்பான படிப்புகள் மாணவர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. உடல்நலத்தை மேம்படுத்துதல், நோய்வரமால் தடுத்தல், நோய் வந்த பின்னர் சரி செய்தல் இழந்த சக்தியை மீண்டும் பெறச் செய்திடன் உள்ளிட்டவை இயற்கையான முறையில் செய்யப்படும் மருத்துவமாகும். 

பி.என்.ஒய்.எஸ். என்பது அதாவது ’Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS)’ (பேச்சுலர் ஆஃப் நேச்சுரோபது அண்ட் யோகிக் சயின்ஸ்) என் பெயரில் 5 ஆண்டுகால பட்டப்படிப்பாகும்.

இந்தப் படிப்பு சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் உள்ளது. இதில் சேர்வதற்கு ப்ளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். 

இந்தப் படிப்பில் முதலாம் ஆண்டு, உடல் கூறு இயல், உடல் செயலியல், உயிரிவேதியல், இரண்டாம் ஆண்டு யோகாநுண்ணுயிரியியல், நோயியல், உளவியல், இயற்கை நோய்அறிதல், நவீன நோய்அறிதல், மருந்தியல், மூன்றாம் ஆண்டு  தடயஅறிவியல், சமூக மருத்துவம், மகட்பேறு மருத்துவம், வாசனை மருத்துவம், யோகா மருத்துவம், மஜாஜ், அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, வண்ண மருத்துவம், நீர்சிகிச்சை, உணவு சிகிச்சை, உபவாச சிகிச்சை, இயற்கை முறை மருத்துவம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.

பின்னர் கடைசி ஆறு மாத காலம், மருத்துவப் பயிற்சி பெற வேண்டும். பயிற்சியைக் கல்லூரியிலும் பெறலாம். அரசு மருத்துவமனைகளிலும் பெறலாம்.

2023-2024-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு & அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு (5 ½ ஆண்டுகள்) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கான (விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in  என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள்., கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in - என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம். கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

”செயலாளர், தேர்வுக்குழு,

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம்,

அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,

அரும்பாக்கம்,

சென்னை-600 106”

என்ற முகவரிக்கு 14.08.2023 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

30.07.2023 முதல் இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:14.08.2023 மாலை 5.00 மணி வரை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget