மேலும் அறிய

வங்கி, ரயில்வே, எஸ்எஸ்சி பணிகள்; 6 மாதகால இலவச உறைவிடப் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?

ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிக்கப்பட்டது.

SSC, RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் - போட்டித் தேர்வுப் பிரிவு, SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டம் ' நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் - போட்டித் தேர்வுப் பிரிவு 'நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டம்' நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு- 2025

2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போட்டித்தேர்வு பிரிவு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2024-2025 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிக்கப்பட்டது.

இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக "நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை" துவங்கவுள்ளது.

மே 31ஆம் தேதி நுழைவுத் தேர்வு

இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 31.05.2025 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in/ விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து. 29.04.2025 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.05.2025 ஆகும்.             

1000 பேருக்குப் பயிற்சி

6 மாதங்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கு 300 பேருக்கும், வங்கிப் பணிக்கு 700 பேருக்கும் பயிற்சி வழங்கப்படும்.

இதற்குக் குறைந்தபட்ச வயது 21 ஆகவும் அதிகபட்சம் 29 ஆகவும் இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/reportsmedia/landing_data/Text_bf55b73c_Notification_for_SSC_Banking_Entrance_Exam_-_DRAFT.pdf

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget