மேலும் அறிய

Guest Lecturers: உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: கவுரவ  விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: அன்புமணி வலியுறுத்தல்

உதவிப் பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் கவுரவ  விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது:

''தமிழக அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில்,  அதில் 50 சதவீதத்தைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5,303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும்!

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர் கல்வித் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது!

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் தகுதி மற்றும் திறமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தேவையில்லை. கவுரவ விரிவுரையாளர்களில் யு.ஜி.சி. நிர்ணயித்த கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும்  சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும்.''

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Guest Lecturers: உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: கவுரவ  விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின. 

நிலைமையை சமாளிப்பதற்காக 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக உயர் கல்வித்துறை வெளியிட உள்ளது. 

முன்னதாக ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எழுத்துத் தேர்வை அறிமுகம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு மற்றும் பணி அனுபவத்திற்கு மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக எழுத்துத் தேர்வில் 200 மதிப்பெண்களும் பணி அனுபவத்திற்கு 30 மதிப்பெண்களும் என 230 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது காலியாக உள்ள 7,918 உதவி விரிவுரையாளர் பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் நடப்பாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?

CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?

’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!

ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?

Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

Embed widget