திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கு செப்.1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்!
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு multiple choose questions என்ற அடிப்படையில்தான் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு செப்டம்பர் 1 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் 43 மத்திய பல்கலைக்கழங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இந்தப்பல்கலைக்கழகத்தில் சேர நினைக்கும் மாணவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி 2021- 2022 ஆம் ஆண்டிற்கான நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் செப்டம்பர் 1 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் உடனடியாக நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட , ஜம்மு காஷ்மீர், ஹரியானா, குஜராத், ஆந்திரப்பிரதேசம், அசாம், பஞ்சாப், கேரளா ஆகிய 12 மாநிலங்களை ஒன்றிணைத்து மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நுழைவுத்தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் 15, 16, 23 மற்றும் 24 ஆகிய நான்கு தேதிகளில் மொத்தம் 150 க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப்பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் போன்ற 9 மாவட்டங்களில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடைபெறவுள்ளது. எனவே மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியான http://cucet.nta.nic.in வாயிலாக இதற்கான செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், நுழைவுத்தேர்விற்கான கட்டணம் செலுத்த செப்டம்பர் 2 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரு தேதிகளில் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே மத்தியப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரி அறிவியில், பொருளாதாரமம் போன்ற பாடங்களுக்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு மற்றும் பி.எஸ்சி, பிஎட் போன்ற பட்டப்படிப்புகள் பயிலவும் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்துத் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு மத்திய பல்கலைழக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வும், வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு multiple choose questions என்ற அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். எனவே மாணவர்கள் தங்களுடைய பாடத்திட்டங்களை நன்றாக படித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.