மேலும் அறிய

Medical Counselling: மாணவர்களே..! மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், விண்ணப்பிப்பது எப்படி?

Medical Counselling: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

Medical Counselling: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று மாலை 5 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கலந்தாய்வு - விண்ணபிக்க இன்றே கடைசி நாள்:

மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டு இருந்த இதுதொடர்பான அறிவிப்பில்,விண்ணப்பதாரர்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டதால், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான செயல்முறையை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 09.08.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி வரை தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி? மாணவர்களே… இன்று முதல் ஆக.8 வரை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்- எப்படி?

கலந்தாய்வு எப்போது?

மருத்துவ கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு,  மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  முன்னதாக, இந்திய அளவில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, முதல் சுற்றுக் கலந்தாய்வு  ஆக.14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் மாநில அளவிலான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு முடிந்ததும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீடு கலந்தாய்வு எப்போது?

அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு மாணவர்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு, ஆகஸ்ட் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை. 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான இடங்கள்:

எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050  இடங்கள், ஒரு இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்கள்,மூன்று மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் 450 இடங்கள் என மொத்தம் தமிழ்நாட்டின் 9050 மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல்  பிடிஎஸ் பல் மருத்துவப் படிப்பில் மூன்று அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ்படிப்பில் 851 இடங்களும் பிடிஎஸ் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget