மேலும் அறிய

Anbumani: நீட் தற்கொலைக்கு முடிவே இல்லையா? இதையாவது செய்யுங்க! - அன்புமணி வலியுறுத்தல்

நீட் தற்கொலைக்கு முடிவே இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். 

நீட் தற்கொலைக்கு முடிவே இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:    

''தமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்து விடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்தத் துயரம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற மாணவர், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மாணவர் முரளி கிருஷ்ணா கடந்த 2021-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டே அவர் நீட் தேர்வு எழுதிய போதிலும், அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதனால், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுதி, மருத்துவம் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்வுக்கு தயாராகி வந்தார். நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், புதன்கிழமை (ஜூலை 6) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

’நீட் தேர்வு மிகவும் கடினமாக உள்ளது’

நீட் தேர்வுக்கு அஞ்சி தாம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விளக்கிக் கடிதம் ஒன்றையும் முரளி கிருஷ்ணா எழுதி வைத்துள்ளார். அதில்,‘‘நீட் தேர்வு மிகவும் கடினமாக உள்ளது; மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு மதிப்பெண் எடுக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று முரளி கிருஷ்ணா குறிப்பிட்டிருக்கிறார். 

ஒருபுறம் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தால் ஏற்படும் அழுத்தம், மறுபுறம் தமது பிள்ளைகளை எப்படியாவது மருத்துவராக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள்  கொடுக்கும் அழுத்தம் ஆகிய இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள்தான் தேர்வுக்கு முன்பே தற்கொலை செய்து கொள்கின்றனர். நடப்பாண்டில் இந்த அழுத்தத்திற்கு இரையாகிய முதல் மாணவர் முரளி கிருஷ்ணா அல்ல... ஏற்கனவே கடந்த புதன்கிழமை சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவை இனியும் தொடரக்கூடாது.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மிகப்பெரிய சமூக அநீதி. அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதில், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மாணவர்களின் தற்கொலைக்கு அவர்களிடம் தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் இல்லாததும், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து திணிக்கப்படும் அழுத்தமும்தான் மிக முக்கியக் காரணம் ஆகும். நீட் தேர்வை எழுதுவது மருத்துவம் படிப்பதற்கான முயற்சி ஆகும். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; முதல் முயற்சியில் வெற்றி கிடைக்காவிட்டால் உலகமே நம்மை விட்டு விலகிச் சென்று விட்டதாக கருதி தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அது கோழைத்தனம்.

மருத்துவக் கல்வி என்ற ஒற்றை இலக்கு கூடாது

அதேபோல், மருத்துவப்படிப்பு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய உயர்படிப்பு அல்ல. வேலைவாய்ப்பும், சேவை வாய்ப்பும் இன்னும் அதிகமுள்ள ஏராளமான படிப்புகள் உள்ளன. அவற்றை தேடும் முயற்சியில் எந்தப் பெற்றோரும், மாணவர்களும் ஈடுபடுவதில்லை. மாறாக, கண்கள் மறைக்கப்பட்ட குதிரைகளைப் போல மருத்துவக் கல்வி என்ற ஒற்றை இலக்கை மட்டுமே அவர்கள் ஓடுகின்றனர். அந்த இலக்கை எட்ட முடியாவிட்டால், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். மருத்துவக்கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மாற்றுப் பாட வாய்ப்புகளை ஆராய வேண்டுமே தவிர, தற்கொலை செய்துகொள்ளக் கூடாது. இதுதான் மாணவர்களுக்கு எனது வேண்டுகோள் ஆகும்.

மற்றொருபுறம் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு  விலக்கு அளிக்கக் கோரும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு 234 நாள் போராட்டத்திற்குப் பிறகு மே 3-ஆம் தேதிதான் மத்திய அரசுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின் 67 நாட்களாகி விட்டன. இதற்கு மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு தாமதம் காட்டக்கூடாது. தமிழக முதலமைச்சர் உடனடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நீட்விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அத்தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சம், அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றைப் போக்குவற்காக அவர்களுக்கு  தொலைபேசி வழியிலான கவுன்சலிங் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget