மேலும் அறிய

All Pass: 9ஆம் வகுப்புக்கு ஆல்பாஸ்; ஆனால் இவர்களுக்கு மட்டும் கிடையாது - பள்ளிக் கல்வித்துறை 

தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட நாட்களாக பள்ளிக்கே வராத மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 

இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைந்தது.

8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2021-22ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


All Pass: 9ஆம் வகுப்புக்கு ஆல்பாஸ்; ஆனால் இவர்களுக்கு மட்டும் கிடையாது - பள்ளிக் கல்வித்துறை 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பள்ளிகள் திறப்பில் தாமதம், அதனால் ஏற்பட்ட கற்றல் இழப்பும், பாடத்திட்டம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 

ஆண்டு இறுதித் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் நீண்ட நாட்களாகப் பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை

வீடியோ

நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
TR Balu: ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Maruti Alto k10: பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
Embed widget