மேலும் அறிய

ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!

பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 75 (50%) ஆகவும்,  மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 52 (35%) ஆகவும் குறைக்க வேண்டும்.

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில், தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக அரசு குறைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் மேலும் கூறும்போது, ’’தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவதற்காக பல மாநிலங்களில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அத்தகைய திட்டங்களை அறிவிக்காதது ஆசிரியர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிற விதிகளை பின்பற்றி நியமிக்கப்படுகின்றனர். 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலைதான் இருந்தது.

இதையும் வாசிக்கலாம்: Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு! 

எல்லோருக்கும் கட்டாயமான தகுதித்தேர்வு

ஆனால், அவர்களுக்கு தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்தது.

பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உடனேயே, ஆசிரியர்களுக்காக சிறப்புத் தகுதித் தேர்வை மிகவும் எளிமையான முறையில் நடத்தியும், தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்தும் அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை வழங்கியது.

ஆனால், அதை அப்போது ஏற்காத திமுக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் காலத்தை வீணடித்தது. திமுக அரசின் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிறப்புத் தகுதித் தேர்வை அறிவித்தது. அதுதான் ஜூலை 4, 5ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

2011ஆம் ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பயின்றபோது இருந்த பாடத்திட்டமும், இப்போது உள்ள பாடத்திட்டமும் முற்றிலுமாக மாறுபட்டது என்பதால், அந்த ஆசிரியர்களால் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம் ஆகும். அதனால் அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்க வேண்டும் என்பதுதான் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அத்தகைய சிறப்பு சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பொதுப்பிரிவினர்  60% (150&க்கு 90) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (150&க்கு 82) மதிப்பெண்களும்  பெற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 28&ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட  அரசாணையின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான தேர்ச்சி  மதிப்பெண் 50% ஆகவும் உயர்த்தப்பட்டது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இரு பிரிவுகளாக பிரித்தது நியாயமல்ல.

 

எந்த பயனும் இல்லை

அதன்பின் அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்கள் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆசிரியர் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ஆசிரியர்கள் 75 மதிப்பெண்களும்,  பட்டியலின, பழங்குடியின ஆசிரியர்கள் 60 மதிப்பெண்களும் எடுப்பது கடினம் என்று கூறப்படுகிறது. தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்காமல் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்றும், சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறாது என்றும் ஆசிரியர் அமைப்புகள் கூறுகின்றன. இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சூழல்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மேற்கு வங்க அரசு, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற 55 மதிப்பெண்கள் (37%) போதுமானது என்று அறிவித்திருக்கிறது. இது நியாயமானது தான். 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் 20 ஆண்டுகளுக்கும்  கூடுதலான பணி அனுபவம் கொண்டிருப்பார்கள். அவர்களின் தகுதி மீது யாரும், எந்த ஐயமும் கொள்ள முடியாது.

அவர்கள் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை உருவாக்கிய ஆசிரியர்கள்தான். அவர்களுக்கும் தகுதித் தேர்வு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அதை  நிறைவேற்றுவதற்காகத் தான் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பிட்ட அளவுக்கு கீழ் குறைக்காதபட்சத்தில் நீதிமன்றமும் இதை எதிர்க்காது.

எனவே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 150-க்கு 75 (50%) ஆகவும்,  மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 150-க்கு 52 (35%) ஆகவும் குறைக்க வேண்டும். அதன் மூலம் சிறப்புத் தகுதித் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள்  அனைவரும் தேர்ச்சி பெற்று பணியில் தொடருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget