மேலும் அறிய

Central Govt: "உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை

Central Govt Higher Education: மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய மசோதா, உயர்கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என விசிக எம்.பி., ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.

Central Govt Higher Education: நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் மத்திய அரசின் கைக்குள் செல்லும் புதிய மசோதாவை பாஜக முன்னெடுப்பதாக, விசிக எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

உயர்கல்விக்கு ஆபத்து - ரவிக்குமார் எச்சரிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் மத்திய அரசின் கைக்குள் செல்லும் புதிய மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக, விசிக எம்.பி., ரவிக்குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பான பதிவில், “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆபத்தான மசோதா ஒன்று அறிமுகமாக உள்ளது. விஸ்கிட் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான் சட்ட மசோதாதான் அது. முன்பே அது அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதுதான். இந்த கூட்டத் தொடரில் அது சட்டமாக்கப்படும் எனத் தெரிகிறது. அந்த சட்டமானால் இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் ஒன்றிய அரசின் பிடிக்குள் சென்றுவிடும். 

கலைக்கப்படும் கல்வி அமைப்புகள்:

இந்த மசோதா 2025 டிசம்பர் 15 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்கல்விக்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. விஸ்கிட் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான் என்ற இந்த அமைப்பு பின்வரும் அமைப்புகளுக்கு மாற்றாக அமையும்: (i) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), (ii) அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), மற்றும் (iii) தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE). ஏற்கனவே உள்ள இந்த அமைப்புகள் தொடர்பான சட்டங்களை இந்த சட்டம் ரத்து செய்துவிடும். சட்டம் மற்றும் மருத்துவக் கல்வியை இந்த சட்டத்தின்கீழ் வராது. அவற்றுக்குத் தனியே சட்டங்கள் உருவாக்கப்படும்.  பள்ளிக்கல்வியையும் உயர்கல்வியையும்  ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு ஏற்ப வடிவமைப்பதே ஒன்றிய பாஜக அரசின் நோக்கம். அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துவருகிறது. 

புதிய சட்டத்தின் பாதிப்புகள் என்ன?

இந்த விஸ்கிட் பாரத் … அமைப்பு நிறுவப்படுவதால் பின்வரும் கேடுகள் ஏற்படும்: 

  •  இந்த சட்டம், மானியங்கள் வழங்கும் பொறுப்பை கல்வி அமைச்சகத்திடம் (MoE) ஒப்படைக்கிறது. இதனால் மானிய ஒதுக்கீடென்பது அதிகாரத்துவமானதாகவும், தன்னிச்சையானதாகவும், அரசியல் கணக்கீடுகளுக்குட்பட்டதாகவும் மாறும். ஏற்கனவே இந்தியைப் பயிற்றுமொழியாக ஏற்காத மாநிலங்களுக்கு பள்ளிக் கல்விக்கான நிதியை பாஜக அரசு விடுவிக்க மறுத்துவருகிறது. 
  • உயர்கல்வியென்பது அரசமைப்புச் சட்டத்தின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. அதை இந்த சட்டம் ஒன்றிய அரசின் அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லும். ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 10 பேர் நேரடியாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டோ, அல்லது மத்திய அரசு பரிந்துரைக்கும் “நிபுணர்கள்” ஆகவோ இருப்பார்கள். 
  • VBSA சட்டம் முந்தைய அனைத்து சட்டங்களையும் மேலோங்கி நிறைவேற்றும் (overriding effect) என்பதால், நாட்டின் கூட்டாட்சித் (federal) தன்மைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்
  • உயர்கல்வித் தரநிலைகளை நிர்ணயிப்பதில் ‘ஒரே அளவு அனைவருக்கும்’ (one size fits all) என்ற அணுகுமுறை ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஆனால் HECI/VBSA அணுகுமுறை உயர்கல்வியை ஒருசிலருக்கானதாகச் சுருக்குவதையே நோக்கமாகக் கொண்டு, சமத்துவம்  குறித்த கேள்விகளை முழுமையாகப் புறக்கணிக்கிறது.
  •  VBSA சட்டம், உயர்கல்வி நிறுவனங்களின்  தன்னாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
  •  ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ள கல்வியில் மாநில அரசுகளின் செல்வாக்கக் குறைப்பதோடு, மாநில அரசுகள் நடத்தும் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஆளும் கட்சியுடன் அரசியல் மோதலுக்குள் தள்ளும். 

இதையும் படியுங்கள்: GOD Of War: முருகனை வடநாட்டுக்கு கடத்தும் ஆந்திர திரையுலகம்..! கொதிப்பில் தமிழர்கள் - என்னடா நடக்குது?

”ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கான புதிய சட்டம்”

இந்திய உயர்கல்வியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக இந்த சட்டம் அமையும். இந்த சட்டத்தை நிறைவேற்றுவது மட்டுமின்றி கல்வியை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டப்படி மறுவார்ப்பு செய்வதற்காகவே திருமதி நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சராக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் அகற்றப்படுவது காக்ரோச் ஜன்தா பார்ட்டியின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படலாம். ஆனால், புதிய அமைச்சர் நியமனம் வினாத்தாள் கசிவு உட்பட உயர்கல்வியின் எந்தவொரு சீர்கேட்டையும் தடுத்துவிடாது என்பதே உண்மை.  வினாத்தாள் கசிவு முதலானவை உயர்கல்வியைப் பீடித்துள்ள நோயின் அறிகுறி மட்டும்தான். தேசிய கல்விக் கொள்கை ( NEP) என்பதுதான் நோய். அந்த நோயை ஒழிப்பதே நம் இலக்காக இருக்க வேண்டும்” என விசிக எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget