மேலும் அறிய

Maruti Alto k10: பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்

Maruti Suzuki Alto k10 CNG EMI Scheme: பஜாஜ் பல்சர் பைக்கின் விலையில் 35KM மைலேஜ் வழங்கக் கூடிய மாருதி சுசூகியின் ஆல்டோ கே10 காரை வாங்குவதற்கான மாதந்திர தவணை விவரம் கீழே விளக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Alto k10 CNG EMI Scheme: மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கே10 கார் தொடர்பான கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாருதி ஆல்டோ கே10 சிஎன்ஜி

கார் என்றாலே பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாறி நடுத்தர மக்களின் அடிப்படையாக மாறியுள்ளது. மலிவு விலை தொடங்கி ப்ரீமியம் வரை என, பல்வேறு பிரிவுகளில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே,  மூத்த குடிமக்களும் தங்களது அன்றாட பணிகளுக்காக இயக்குவதற்கு எளிதாகவும், நல்ல மைலேஜ் மற்றும் எளிதான பராமரிப்பு தேவைப்படும் காரை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பேருந்து மற்றும் ஆட்டோக்களில் மாறி மாறி ஏறி இறங்கும் சிக்கலை தவிர்க்க கார் பயன்பாட்டை விரும்புகின்றனர். ஆனால், பெரும்பாலானோருக்கு மொத்த தொகையையும் செலுத்தி உடனடியாக காரை வாங்குவதில் சிரமம் இருக்கலாம்.  இந்நிலையில் கிலோவிற்கு சுமார் 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கக் கூடிய மாருதியின் ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி எடிஷனை, பல்சர் பைக்கின் விலையில் சொந்தமாக்குவது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி ஆல்டோ கே10 விலை

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள், ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என மொத்தம் 8 வேரியண்ட்களில் ஆல்டோ கே10 காரானது விற்பனை செய்யப்படுகிறது.  இதன் விலை வரம்பு ரூ.3.70 லட்சத்தில் தொடங்கி ரூ.5.45 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் ) ரூபாய் வரை நீடிக்கிறது.  குறிப்பாக சிஎன்ஜி வேரியண்டின் ஆரம்ப ஆன் ரோட் விலையே 5 லட்சத்தை கடக்கிறது. அடிப்படை வேரியண்டான LXI S  சிஎன்ஜி எடிஷனின் விலையானது 5 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் எக்ஸ் - ஷோரூம் விலை ரூ.4.81 லட்சம் போக, பதிவு கட்டணமாக ரூ.57,000 மற்றும் காப்பீட்டு கட்டணமாக 24 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

பல்சர் விலையில் ஆல்டோ கே10

பஜாஜ் பல்சர் RS200 பைக் மாடலின் விலை வரம்பானது ரூ.1.75 லட்சத்தில் தொடங்குகிறது. ஒருவேளை அந்த தொகை உங்கள் கையில் இருந்து, பேருந்து மற்றும் ஆட்டோக்களை எதிர்பார்க்காமல், காத்திருப்பு போன்ற பிரச்னைகளை தவிர்த்து, யாரையும் எதிர்பார்க்காமல் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்கான காரை வாங்க விரும்பினால், அதற்கான வலுவான நிதி திட்டங்களை ஆன் - ரோட் விலை அடிப்படையில் வங்கிகள் வழங்குகின்றன. அதன்படி, நீங்கள் ரூ.1.75 லட்சம் ரூபாயை டவுன் - பேமண்டாக செலுத்திவிட்டு, மீதமுள்ள ரூ.3.85 லட்சத்திற்கு கடனாக பெற்று வங்கியின் மாதந்திர தவணை திட்டத்தை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்: Best Selling SUV: விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்

ஆல்டோ கே10-ற்கான தவணை திட்டம்

காரின் மொத்த விலையான ரூ.5.64 லட்சத்தில் ரூ.1.75 லட்சம் முன்பணமாக செலுத்திவிட்டு , ரூ.3.85 லட்சத்தை கடனாக வாங்குவதாக கருதுவோம். 7 ஆண்டுகளுக்கு 8 சதவிகித வட்டியுடன் மாதாந்திர தவணை முறையில் திருப்பி செலுத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். மாதாந்திர தவணை சுமார் ரூ.6,000 மட்டுமே ஆகும். 7 ஆண்டுகள் முடிவில் அந்த காருக்காக ஒட்டுமொத்தமாக நீங்கள் 5 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை செலுத்தி இருப்பீர்கள். எரிபொருள் விலை மற்றும் உங்களுக்கு கிடைக்கும் சொகுசான பயண அனுபவத்தை கருத்தில் கொண்டால, நீங்கள் கூடுதலாக  வட்டிக்கு மட்டுமே செலுத்தும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை என்பது உங்களது சேமிப்பாகவே அமையும்.

ஆல்டோ கே10 - 35KM மைலேஜ்

மாருதி சுசூகி aஅல்டோ கே10 LXI S  சிஎன்ஜி வேரியண்டில் 998சிசி  3 சிலிண்டர் கே10சி நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜினை பயன்படுத்துகிறது. 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டு கிலோவிற்கு 33.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் 21 முதல் 24 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலை பகுதிகளில் 31 முதல் 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதகாவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 8 கிலோ எடையிலான கொள்ளளவை கொண்டுள்ள சிஎன்ஜி டேங்கை முழுமையாக நிரப்பினால் 200 முதல் 250 கிலோ மீட்டர் தூரம் இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். 

ஆல்டோ கே10 - அம்சங்கள், வசதிக்ள்

5 பேர் பயணிக்கும் வகையில் தாராளமான இடவசதி கொண்டுள்ள இந்த காரில், முன்புறத்தில் டிஸ்க் ப்ரேக்கும், பின்புறத்தில் ட்ரம் ப்ரெக்கும் இடம்பெற்றுள்ளன. வசதியான பயணத்திற்காக முன்புறத்தில் காய்ல் ஸ்ப்ரிங் உடன் கூடிய மேக்ஃபெர்சன் ஸ்ட்ரட்டும், பின்புறத்தில் காய்ல் ஸ்ப்ரிங்குடன் கூடிய டார்சியன் பீம் உள்ளது. இதுபோக ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் அட்டோ கம்பேடிபிளிட்டி உடன் கூடிய 7 இன்ச்  ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ டச்ஸ்க்ரீன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் ஆகியவற்றை கொண்டு, பாதுகாப்பு பரிசோதனையில் 2 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget