ABP Nadu Exclusive : அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம்.. ஆனால் இதற்கு மட்டும் காசு கொடுத்து விடுங்கள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம் என்ற நிலையில் தேர்வு கட்டணம் வசூலிப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்புக், காலணிகள், புத்தகப் பை, சீருடை, எழுதுகோல், வண்ண பென்சில்கள், சத்துணவு, பேருந்து அட்டை, கணித உபகரணங்கள், உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம் என அரசும் கூறி வருகின்றது. மேலும் இதற்காக தமிழக பட்ஜெட்டில் அதிக அளவில் நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது. கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டிலும் அதிகபட்சமாக 40,299 கோடி ரூபாயை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசமாக வழங்கும் அரசாங்கம் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை மட்டும் வசூலித்து வருகிறது. இது பெற்றோர்கள் மட்டும் இன்றி இதனை கேட்கும் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம் என்ற சூழலில் ஒவ்வொரு மாணவர்களிடம் குறைந்த பட்சமாக தொகையாக 10 முதல் 60 ரூபாய் வரை தேர்வு கட்டணம் வசூலிப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் நோட்டுகள், காலணி, புத்தக பை, சீருடை என பல ஆயிரம் கோடிகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவு செய்யும் அரசு இந்த செற்ப ரூபாயை மட்டும் வசூலிப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் பல கிராமப்புற மாணவர்கள் அந்த குறை தேர்வு கட்டணத்தை கூட வழங்க முடியாத சூழல் நிழவுவதாகவும், அதனை கொடுக்க இயலாத நிலையில் அவர்கள் தேர்வு வருவதை தவிப்பதாகவும், தெரிய வருகிறது. மேலும் ஒருசில வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களில் தேர்வு கட்டணத்தை அவர்களின் சொந்த பணத்தில் செலுத்தும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகையில், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவித்து எண்ணிக்கைகளை அதிக படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர். மேலும், ஏழை எளிய மக்களின் கல்வி கனவை அனைத்தும் இலவசமாக வழங்கி அதனை நிறைவேற்றி வருகிறது.
பிரதம மந்திரியின் யாசவி கல்வி உதவித்தொகை ஓராண்டாகியும் கிடைக்கவில்லை - தென்காசி மாணாக்கர் வேதனை
இவ்வாறான சூழலில் மாணவர்களிடம் இந்த செற்ப தொகையான தேர்வு கட்டணத்தை வசூலிப்பதை தவித்து அதனையும், அரசு ஏற்றுகொள்ள வேண்டும் எனவும், தேர்வு கட்டணம் மிக சிறிய தொகை என்றாலும், அரசு பள்ளிகளில் பயிலும் பல மாணவர்களுக்கு அது ஒரு பெரும் தொகையாகவும், சுமையானதும் கூட என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து இனி வரும் காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த தேர்வு கட்டணம் வினா மற்றும் விடைத்தாளுக்கானது என கூறி அரசு பள்ளிகளில் வசூலித்து வருகின்றனர். பலகோடி ரூபாய் மதிப்புள்ள பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்புக்களை அச்சிடும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மாணவர்களுக்கான விடைதாளையும் வழங்க வேண்டும் என்றும், தற்போது வினாத்தாள்கள் அந்தந்த பள்ளிகளில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளும் சூழல் உள்ள நிலையில், அதற்கான பேப்பர்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.