மேலும் அறிய

Online Rummy: சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்குக: அன்புமணி

சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தைப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். 

சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தைப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம்  சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.  குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு கலக்கும் அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று பாமக கடந்த ஆண்டே வலியுறுத்தியும் அதை பாடநூல் நிறுவனம் செய்யாதது கண்டிக்கத்தக்கது.

முழுக்கள் என்ற தலைப்பிலான கணிதப் பாடம் முழு எண்களைக் கொண்டு கூட்டல் மற்றும் கழித்தலை விளையாட்டு வடிவத்தில் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஆனால், எந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டுவது, எந்த எண்ணை கழிப்பது என்பதை சீட்டுக்கட்டுகள் மூலமாக அந்தப் பாடம் கற்றுத் தருவது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். பாடத்தில் சீட்டுக்கட்டுகள் படத்தை அச்சிட்டு அதை இரு மாணவர்கள் விளையாடுவதைப் போலவும், இடையில் ஆசிரியர் தலையிட்டு  எவ்வாறு விளையாடுவது என்பதை கற்றுக்கொடுப்பது போலவும் முழுக்கள் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீட்டுக்கட்டுகள் என்றாலே சூதாட்டம்தான்!

பாடத்தின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதற்காக சீட்டுக்கட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  சீட்டுக்கட்டுகள் என்றாலே சூதாட்டம்தான் நினைவுக்கு  வரும். குழந்தைகள் மாணவர் பருவத்தில் படிக்கும் விஷயங்களும், பழகும் விஷயங்களும் எளிதில் மனதை விட்டு அகலாது. இத்தகைய சூழலில் ஆறாம் வகுப்பு பாடத்தில் சீட்டுக்கட்டு படங்களை அச்சிட்டு அதைக் கொண்டு எவ்வாறு விளையாடுவது என்று கற்றுக் கொடுத்தால், பின்னாளில் அவர்கள் வளர்ந்த பின் சூதாட்டத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

Online Rummy: சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்குக: அன்புமணி

தமிழ்நாட்டில் இன்று ஆன்லைன் சூதாட்டம்தான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த சில ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 15 மாதங்களில் மட்டும் 34 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் என்ற உயிரைப் பறிக்கும் சுழலில் இருந்து மக்களைக் காக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

பாடத்தை உடனடியாக நீக்குக!

பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட  சட்டத்திற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இத்தகைய சூழலில் தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முழுக்கள் பாடம் கற்பிக்கப்பட உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்; அதன் தீய விளைவுகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களை மீட்க வேண்டும் என்று போராடி வரும் நிலையில், மாணவர்களுக்கு சூதாட்டம் குறித்த சிந்தனையைத் தூண்டும் பாடத்தை அனுமதிக்கக் கூடாது; அந்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

ஆறாம் வகுப்பு கணிதப் பாடத்தில் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான பாடம் இருப்பது எனது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அந்தப் பாடத்தை நீக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் நாள் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், நடப்புக் கல்வியாண்டிலும் அந்த பாடம் தொடர்வது  ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். மூன்றாம் பருவம் வரும் ஜனவரி மாதத்தில் தான் தொடங்குகிறது. அதற்கு முன்பாக சூதாட்டத்தை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை பாடநூலிலிருந்து நீக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் மனதில் சூதாட்டம் குறித்த சிந்தனை எழுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget