மேலும் அறிய

அரசுக் கல்லூரி பணியாளர்களுக்கு 9 மாத ஊதிய நிலுவை: பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா? வலுக்கும் கோரிக்கை

பத்தாண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் இவர்களின் பணிகளுக்காக கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை கூட செலவழிக்க முடியவில்லை என்பதை ஏற்க இயலாது- ராமதாஸ்.

அரசுக் கல்லூரிகளின் தினக்கூலி பணியாளர்களுக்கான 9 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த  41 உறுப்பு கல்லூரிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இந்த கல்லூரிகளில் 2006-ஆம் ஆண்டு முதல் உறுப்புக் கல்லூரி செயல்பட தொடங்கியதில் இருந்து  20 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவாளர், பெருக்குபவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற ஆசிரியரல்லா பணியாளர்கள் 231 பேர்  தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர். 

20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மறு புதுப்பித்தல் அடிப்படையில் தினக்கூலி ஊழியர்களாகவே பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 420 ரூபாய்  முதல் 520  ரூபாய் வரை என மாதம் 9,240 முதல் 11,440 வரைதான்  ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றி விடக்கூடாது என்பதற்காகவே அந்தந்த கல்வி ஆண்டில் புதிதாக பணியில் சேர்வதை போல ஒவ்வொரு ஆண்டும் மறு புதுப்பித்தல் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகங்கள் பணியாற்ற செய்கின்றன.

சொற்ப ஊதியம் கூட இல்லையா?

மிகக் குறைந்த சொற்ப அளவிலான ஊதியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்களுக்கு இந்த 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மறு புதுப்பித்தல் கூட செய்யப்படவில்லை. இவர்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் 9 மாதங்களாக அந்த சொற்ப ஊதியம் கூட வழங்கப்படவில்லை. மேலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மறுப்புதிப்புதல் செய்யாததும், மாத ஊதியத்தை வழங்காமலும் இருப்பது அவர்களின் தகுதி, பணித்திறன் போன்றவற்றை உதாசீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பங்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாழாக்குவது போன்றதாகும். 

கடந்த 23.9.2024 அன்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின்படி இவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்திற்காக ஆண்டுக்கு ரூபாய் 3 கோடி தான் செலவழிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு அரசு பத்தாண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் இவர்களின் பணிகளுக்காக கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை கூட செலவழிக்க முடியவில்லை என்பதை ஏற்க இயலாது.  

உடனே பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

எனவே நிலுவையிலுள்ள கடந்த 9 மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்குவதுடன் இந்த 231 பேரின் தகுதி, திறமை, பணித்திறன், அனுபவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget