மேலும் அறிய

8th Public Exam Hall Ticket: 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?

8th Public Exam Hall Ticket 2023: தனித்தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. 

தனித்தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு ஆகஸ்ட்‌ மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்‌ கூட அனுமதிச் சீட்டுகளை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று (ஜூலை 31) வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று தெரிவித்து உள்ளதாவது:

’’தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு 07.08.2023 முதல்‌ 11.08.2023 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத தேர்வுத்‌ துறையின்‌ சேவை மையங்களில்‌ (Service Centre) ஆன்‌லைன்‌ மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின்‌ மூலம்‌ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக இணைய தளப் பக்கத்துக்குச் செல்லவும். அதில், ‌HALL TICKET என்ற வாசகத்தை க்ளிக் செய்தால், "ESLC AUGUST 2023 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற தலைப்பு வரும். அதில் உள்ள "DOWNLOAD HALL TICKET" என்ற வாசகத்தினை பேரே செய்து தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண்‌ (Application Number) பிறந்த தேதி (Date of birth‌) ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில்‌ தோன்றும்‌. அதனை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.

எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில்‌ அறிவிப்பு எதும்‌ அனுப்ப இயலாது எனவும்‌ அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.

தேர்வு எப்போது?

தேதி  கிழமை நேரம்‌ பாடம்‌
07.08.2023 திங்கட்‌கிழமை காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  தமிழ்‌
08.08.2023 செவ்வாய்‌க்கிழமை‌ காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  ஆங்கிலம்‌
09.08.2023 புதன்‌ கிழமை  காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  கணிதம்‌
10.08.2023 வியாழக்‌கிழமை காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  அறிவியல்‌
11.08.2023 வெள்ளிக்கிழமை‌  காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  சமூக அறிவியல்‌

முன்னதாக இந்தத் தேர்வுக்கு, 01.08.2023 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்‌ தேர்வர்கள் ஜூன் 20 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த பின், தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.125/- மற்றும்‌ ஆன்லைன்‌ பதிவுக் கட்டணம்‌ ரூ.70/- என மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில்‌ நேரடியாகச் செலுத்தினர்.

இந்நிலையில் தேர்வுக்‌ கூட அனுமதிச் சீட்டுகளை தற்போது அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget