மேலும் அறிய

சென்னை பல்கலை., ஆன்லைன் தேர்வு மோசடி - 5 அதிகாரிகள் சஸ்பென்ட் செய்ய பரிந்துரை

சென்னை பல்கலை கழக ஆன்லைன் தேர்வு மோசடி உடந்தையாக இருந்த 5 அதிகாரிகள் சஸ்பென்ட் விசாரணை குழு பரிந்துரை

சென்னை பல்கலை கழக ஆன்லைன் தேர்வு மோசடியில் உடந்தையாக இருந்த 5 அதிகாரிகளை சஸ்பென்ட் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.
 
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அப்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. அரியர் உள்பட அனைத்து தேர்வுகளையும் வீட்டில் இருந்தே எழுத அனுமதி அளிக்கப்பட்டது. சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைநிலை கல்வி பிரிவு நடத்திய இந்த தேர்வில் சிலர் பல்கலைக் கழகத்தில் சேராமலேயே கடைசி நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வீட்டில் இருந்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது 116 பேர் பல்கலைக்கழக படிப்பில் சேராமல் தேர்வுக்கு மட்டும் விண்ணப்பித்து பட்டம் வாங்க முயன்றதும், பல்கலைக் கழகத்தின் அதிகாரிகள் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெறுவது வரை உதவி இருப்பதும் உறுதியானது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் பி.காம், பி.பி.ஏ. பட்டங்களை பெற முயன்றுள்ளனர். இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு அவர்கள் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. ஆனால் அவர்களுக்கான கல்வி கட்டணம் ரூ.20 ஆயிரம் மட்டுமே ஆகும்.
 
இதுகுறித்து தொலை நிலை கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் முதல் கட்ட விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரியிடம் தாக்கல் செய்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை வேந்தர் கவுரி உத்தரவிட்டார். இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க பல்கலை கழகத்தின் சிண்டிகேட் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்புகள் துறை இயக்குனர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தேர்வர்கள், சேர்க்கை மையத்தினர், பல்கலைக்கழக ஊழியர்கள் தேர்வுத் துறையினரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 116 பேர் போலி மாணவர்களாக தேர்வு எழுதி 'ஆல் பாஸ்' முறையில் பட்டம் பெற முயன்றதும், பல்கலைக்கழக ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இதற்கு உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மோசடியில் தொடர்புடைய 2 உதவி பதிவாளர்கள் உள்பட 5 பேரை சஸ்பெண்டு செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. இதற்கு சிண்டிகேட் குழுவும் ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையில் உதவி பதிவாளர்கள் தமிழ்வாணன், மோகன் குமார், உதவி பிரிவு அதிகாரிகள் எழிலரசி, சாந்தகுமார், உதவியாளர் ஜான் வெஸ்லின் ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து துணை வேந்தர் கவுரி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Thiruvallur District Holiday : ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
DMK MLA Markandeyan : திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
Embed widget