மேலும் அறிய

தொடர்ந்து 48 மணிநேர பணி; முதுநிலை மருத்துவ மாணவர் உயிரிழப்பு : 8 மணிநேர பணியை அரசு உறுதிசெய்யுமா?

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர் தமிழழகன், மருத்துவர்களுக்கான பணி அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.

தொடர்ந்து 48 மணி நேரம் பணி செய்ததால் முதுநிலை மருத்துவ மாணவர் உயிரிழந்ததாகவும் மனித உரிமைகளை மதித்து, மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவர், மருத்துவர்களுக்கான பணி அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மருத்துவர் தமிழழகனின் மறைவுக்கு கூறப்படும் காரணங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

மருத்துவர் தமிழழகன் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார். ஓய்வின்றி இரவு பகலாக பணி செய்ததால் சனிக்கிழமை மாலை அவருக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஓய்வு எடுப்பதற்காக முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான பணி அறைக்கு சென்று அமர்ந்த தமிழழகன் அடுத்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

இயல்பாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை

26 வயதே ஆன மருத்துவர் தமிழழகனுக்கு இயல்பாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், ஓய்வின்றி தொடர்ச்சியாக பணி செய்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவருடன் பணியாற்றும் சக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பணிச்சுமையால் மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த டிசம்பர் மாதத்தில் பணிச்சுமையால் உயிரிழந்த மூன்றாவது மருத்துவர் தமிழழகன் ஆவார்.  அதற்கு முன் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவம் பயின்று வந்த மருத்துவ மாணவர் மருதுபாண்டியன் 48 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ததால் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் படித்து வந்த மருத்துவர் சோலைசாமி 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து பணி செய்ய வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழந்தார். உயிர் காக்க வேண்டிய மருத்துவர்களே ஓய்வின்றி பணி செய்வதால் உயிரிழக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

மக்களின் உயிர்காக்கும் கடவுள்கள் என்று போற்றப்படும் மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதற்கு மாறாக முதுநிலை மருத்துவ மாணவர்களை தொடர்ந்து பல நாட்கள் பணி செய்ய வைத்து அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மனித உரிமைகளை மதிக்காத, மனிதநேயமற்ற செயலாகும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்  போதிய மருத்துவர்களை நியமிக்காதது தான் இத்தகைய சிக்கல்களுக்கு காரணம் ஆகும். முதுநிலை மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை ஓய்வின்றி பணி செய்ய வைப்பதை மன்னிக்கவே முடியாது.

மருத்துவர்களுக்கே மன அழுத்தமா?

சாதாரண தொழிலாளர்களாக இருந்தாலும் கூட அவர்களை 8 மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை வாங்கக்கூடாது என்பதுதான் சட்டமாகும். மருத்துவர்கள் பணி என்பது மருத்துவம் அளிப்பதைக் கடந்து நோயாளிகளிடம் அன்பையும், கருணையையும் காட்ட வேண்டிய பணியாகும். மருத்துவர்களையே மன அழுத்தத்திற்கு ஆளாக்கினால் அவர்களால் மற்றவர்களின் உயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும்?  எனவே, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி பணி முறையைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து நிலை அரசு மருத்துவமனைகளிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"B ஃபார் பாபு, J ஃபார் ஜெகன், P ஃபார் பவன்" ஆந்திரா பார்முலாவை கையில் எடுத்த ராகுல் காந்தி!
Embed widget