மேலும் அறிய

Assistant Professor: 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவகாசம் மே 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 

மே 15 வரை நீட்டிப்பு

அதைத் தொடர்ந்து  அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு மார்ச் 28 முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 29) கடைசித் தேதியாக இருந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் இது உத்தேசத் தேதி மட்டுமே. 

வயது வரம்பு

உச்சபட்ச வயது வரம்பு அதிகமில்லை. 01.07.2024 அன்று 57 வயது நிறைவடையாத தேர்வர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

* குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் கூடிய முதுநிலைப் பட்டம் அவசியம். எனினும் எஸ்சி/ எஸ்டி/ எம்பிசி / டிஎன்சி / பிசி தேர்வர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.

* நெட் எனப்படும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் அல்லது ஸ்லெட் எனப்படும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம். அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* அதில், "How to Apply" என்று கொடுக்கப்பட்டுள்ள பகுதியை கவனமாகப் படித்து அறிந்துகொள்ளவும்.

* அல்லது https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6IjdzU1czdC9ISndTUm81TWhvb3BNOGc9PSIsInZhbHVlIjoidjVZbDBGTE9LaDQ3VzRuUjZiUEYrZz09IiwibWFjIjoiOTJjNmNjMTk3ZmNmYWEzNjQ4MzFjODkyMGNkOGI3OWRlYzY5Mzk1NTZlYjE1ZjE0OGE5ZGNhODc5NWFlY2EwNSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை நேரடியாக க்ளிக் செய்துகொள்ளலாம்.

* சரியான மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரியை அளித்து முன்பதிவு செய்யவும்.

* பெயர், விண்ணப்பிக்கும் பதவி, பாடம், பிறந்த தேதி, சமூகம், முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சரியாக உள்ளிடவும்.

முழுமையான விவரங்களைப் பெறhttps://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தொலைபேசி எண்: 1800 425 6753 (Toll Free)  (10:00 am – 05:45 pm)
 
இ - மெயில் முகவரி: trbgrievances@tn.gov.dot.in

கூடுதல் தகவல்களுக்கு: https://trb.tn.gov.in/ 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தேட்டுன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்தேட்டுன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தேட்டுன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்தேட்டுன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Embed widget