கிருஷ்ணகிரி: 10 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்த இளைஞர்கள் - வீடியோ வைரலான நிலையில் 6 பேர் கைது
சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்த சம்பவத்தில் பெட்டமுகிலாளம் பகுதியைச் சேர்ந்த ருத்திரப்பா, சங்கய்யா, ரமேஷ், சிவராஜ், குமார், அழகப்பா ஆகியோர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுமிக்கு இளைஞர்கள் மது ஊற்றிக் கொடுத்த வீடியோஅதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலைப்பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் மது குடிப்பது போலவும், பீடி பற்ற வைத்து புகைப்பது போலவும் சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் பலரும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழப்பு! சோபாவில் எலும்புக்கூடு- விவரம் தெரியாமல் வீட்டுக்கு வாடகை வசூல்
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தான் 10 வயது சிறுமிக்கு டம்ளரில் மது ஊற்றிக் கொடுத்தது, பீடியை பற்ற வைத்து கொடுத்தது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
'சிறுவயதில் வன்கொடுமை.. யூ ட்யூப்பில் வியூஸ் இல்லை..' - இணையத்தை அதிர வைத்த இளைஞரின் தற்கொலை கடிதம்!
இதனடிப்படையில் காவல் ஆய்வாளர் சம்பூர்ணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்த சம்பவத்தில் பெட்டமுகிலாளம் பகுதியைச் சேர்ந்த ருத்திரப்பா, சங்கய்யா, ரமேஷ், சிவராஜ், குமார், அழகப்பா ஆகியோர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அனைவரையும் தேன்கனிக் கோட்டை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சிவருத்திரப்பா, மல்லேஷ் ஆகிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Rajinikanth Speech: ''பணம், புகழ் இருக்கு.. ஆனா 10% கூட நிம்மதி இல்லை’’ - மேடையில் வேதனையுடன் பேசிய ரஜினிகாந்த்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்