மேலும் அறிய

Rajinikanth Speech: ''பணம், புகழ் இருக்கு.. ஆனா 10% கூட நிம்மதி இல்லை’’ - மேடையில் வேதனையுடன் பேசிய ரஜினிகாந்த்

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நான் எத்தனை படங்களில் நடித்தாலும் என் மனதுக்கு பிடித்த படங்களாக ஸ்ரீராகவேந்திரா, பாபா படங்கள் தான் உள்ளது. 

பணம், புகழ் என அனைத்தையும் பார்த்த எனக்கு நிம்மதி, சந்தோஷம் 10% கூட இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொஸைட்டி ஆப் இந்தியா சார்பில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில், ஆன்மீக வாழ்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஸ்ரீ ராமா கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நான் எத்தனை படங்களில் நடித்தாலும் என் மனதுக்கு பிடித்த படங்களாக ஸ்ரீராகவேந்திரா, பாபா படங்கள் தான் உள்ளது. 

பாபா படத்தை பார்த்து நிறைய பேர் யோகதா சத்சங்கத்தில் இணைந்து இருக்கிறார்கள் என்று சங்கத்தை சேர்ந்தவர்களே சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீராகவேந்திரா படம் வந்த பிறகும் தான் எல்லோருக்கும் ராகவேந்திரர் படம் பற்றி தெரிந்தது. நிறைய பேர் இமயமலைக்கும், பாபா குகைக்கும் செல்கிறார்கள். என் ரசிகர்கள் இருவர் சந்நியாசி ஆகிவிட்டார்கள். நான் இன்னும் நடிகனாக நின்று கொண்டிருக்கிறேன். 

பணம், புகழ், பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைத்தையும் பார்த்த எனக்கு வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் 10% கூட இல்லை . எல்லோருடைய மனமும் பின்னோக்கி அல்லது முன்னோக்கி மட்டுமே இருக்கிறது. ஒன்று பின்னோக்கி நமக்கு நடந்த தீமைகளை பற்றி யோசிக்கிறோம் அல்லது முன்னோக்கி இருக்கும் ஆபத்து பிரச்சனை பற்றி நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளை பாருங்கள்.அவர்கள் நிகழ்காலத்தைப் பற்றி யோசிப்பதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

உடல், அறிவு,மனம் இந்த மூன்றும் முக்கியம்.இதனை இணைப்பது உயிர். 60 வயசுக்கு மேல் நோய் வந்து வாரிசுகளுக்கு பாரமாக இருக்ககூடாது. நமக்கு நாமே பாரமாக இருக்ககூடாது. சந்தோஷமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே உயிர் போய்விட வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
Embed widget