Crime: சென்னையில் பகீர்.. பிரபல மாலில் பாலியல் தொல்லை.. நண்பனே எமனாக மாறிய கொடூரம்.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னையில் உள்ள பிரபல மாலில் ஆண் நண்பரால் இளம்பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள மாலில் ஆண் நண்பரால் இளம்பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஆங்காங்கே பொழுதுபோக்கு மால்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு உணவகங்கள், ஆடை நிறுவனங்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்கள், மதுபான கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் சென்னை அண்ணாநகரில் மால் ஒன்று செயல்பட்டு வருகிறது.
பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மால் எப்போதும் பொதுமக்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து மக்களும் வந்து செல்லும் இந்த மால் சமீபகாலமாகவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கியது. அனுமதியின்றி மியூசிக் பார்ட்டி, பார்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியது என அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்தது.
இந்நிலையில் இளம்பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட பதிவு ஒன்று சம்பந்தப்பட்ட மாலின் என்ற பெயரை இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் கொண்டு சென்றது. அதாவது 22 வயது பெண் ஒருவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக, ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தந்தாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, "சென்னையில் இன்டெர்ன்ஷிப் செய்துக் கொண்டிருந்தபோது ஆன்லைனில் பழக்கமான ஆண் நண்பர் ஒருவர் என்னிடம் படத்துக்கு செல்லலாமா என கேட்டார். நானும் சரி என சொல்லி அவரை சந்திக்க முடிவு செய்தேன். யாரென்றே தெரியாத ஒருவரை பார்க்கப்போகிறேன் என்றும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்றும் தெரியாமல் ஒருவித ஆர்வமாக இருந்தேன்.
சென்னை அண்ணாநகரில் உள்ள மாலில் நாங்கள் படத்துக்கு சென்றோம். முதல் பாதி முடிந்த நிலையில், அந்த நபர் எனக்கு முத்தம் கொடுக்க விரும்புவதாக கூறினார். நான் முடியாது என தெளிவாக சொல்லி விட்டேன். ஆனால் அவர் எனக்கு முத்தம் கொடுக்க முயன்றுக் கொண்டே இருந்தார். எனக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என புரியவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஃபன் சிட்டிக்கு செல்லலாம் என சொன்னார். முதலில் நான் முடியாது என மறுக்க, அவர் வற்புறுத்தவே சரி என சொன்னேன்.
நாங்கள் இருவரும் அங்கிருந்த எக்ஸிட் வழியாக சென்றோம். அந்த இடம் பெரிய அளவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பெரிய அளவில் வெளிச்சம் இல்லாத இடமாக இருந்தது. அப்போது அந்த நண்பர் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை” என தெரிவித்திருந்தார். இதில் சம்பந்தப்பட்ட அந்த நண்பரின் ட்விட்டர் ஐடியையும் டேக் செய்திருந்தார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் இந்த பதிவை வைரலாக மாற்றினர். பலரும் அப்பெண்ணுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மால் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதேசமயம் சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பர் பதிவிட்டதாக ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் இணையத்தில் வைரலாகியது. அதில் “அப்பெண்ணின் சம்மதத்துடன் தான் அந்த சம்பவம் நடந்ததாக” குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.