‛தூர தேசம்... ஒத்த தென்னை மரம்... ஓலைக் குடிசை...’ பேபி ஸ்டைலில் கணவர் கதையை முடித்த வனஜா!
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் பேபி கேரக்டர் போல நடந்த இந்த கொலை சம்பவம் தான், அந்த பகுதியின் தற்போதைய பரபரப்பு பேச்சாக உள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது அத்தை மகளான வனஜாவை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கொத்தனார் வேலை பார்த்து வரும் முருகன்-வனஜா தம்பதிகளுக்கு ஆறு வயதுடைய தர்மலட்சுமணன் மற்றும் ஐந்து வயதுடைய மோனிஜா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகன் மீது மோகம் குறைந்து ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மீது காதலில் விழுந்தார் வனஜா. முருகன் வெளியே போன மறுகனம், கிருஷ்ணன் எண்ட்ரி தருவதும், இன்பம் அனுபவிப்பதுமாய் அவர்களின் நாட்கள் கழிந்துள்ளது. அவர்களின் அன்பு அலை, முருகனின் முகத்தில் தெறிக்க, விசயம் வெடித்துச் சிதறியது. ‛இப்படி பண்ணாத... இதெல்லாம் தப்பு...’ என வனஜாவிற்கு புத்தி புகட்டியுள்ளார் முருகன். வனஜாவும் அதை ஏற்றவரைப் போல், தலைமை ஆட்டியுள்ளார். மனைவியை நம்பி, மறுநாள் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய முருகன், தனது மனைவி வீட்டில் இல்லாததால் தனது பிள்ளைகளிடம் விசாரித்துள்ளார், அப்போது அம்மா தோட்டத்திற்கு போயிருக்கிறார் என குழந்தைகள் கூறி இருக்கின்றனர். தனது மனைவியை தேடி சென்ற போது கள்ள காதலன் கிருஷ்ணாவுடன் மனைவி வனஜா அதே பகுதியில் உள்ள மரவள்ளி தோட்டத்தில் உல்லாசமாக இருந்ததை முருகன் பார்த்துள்ளார்.
அதைக் கண்டு ஆத்திரமடைந்த முருகன், இருவரையும் தாக்க முயற்சித்துள்ளார். உடனே தனது லுங்கியை எடுத்து முருகனின் கழுத்தை கிருஷ்ணன் நெறிக்க, வனஜாவும் தன் பங்கிற்கு உதவ, அவரை அடித்தே கொன்றனர். பின்னர் அவரை தூக்கில் தொங்கவிட்டு, கடன் தொல்லையால் முருகன் தற்கொலை செய்து கொண்டதாக வனஜா நாடகமாடியுள்ளார். உறவினர்களும் அதை நம்பி இறந்த முருகன் பிரேதத்தை மயானத்தில் எரிக்க முற்படும் போது, சிலர் மர்ம மரணம் என குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், எரியூட்ட தயாராக இருந்த பிரேதத்தை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முருகனை மனைவியும், கள்ள காதலனும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் பேபி கேரக்டர் போல நடந்த இந்த கொலை சம்பவம் தான், அந்த பகுதியின் தற்போதைய பரபரப்பு பேச்சாக உள்ளது. அதே நேரத்தில் தந்தை இறந்த நிலையில், தாயும் சிறைக்குச் சென்ற நிலையில் ஆதரவற்ற அந்த இரு குழந்தைகளின் நிலையும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.





















