நண்பனை கொன்று ஆற்றில் புதைத்த கொடூரம்; எமனாக மாறிய பணம் ... அதிரவைக்கும் கொடூர பின்னணி
தமிழரசன் முத்துக்குமரனை பிடித்து டூவீலரில் தள்ளி கையில் வைத்திருந்த ராடால் தலையில் அடித்ததில் அங்கேயே உயிரிழந்தார்.
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சேமங்கலம் கிராமத்தில் ரூ.8 லட்சம் பணத்திற்காக நண்பனை மலட்டாறில் கொன்று புதைதத்து நாடகமாடிய நயவஞ்சக கொடூர கொலைகார பாசக்கார நண்பர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் அடுத்த சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமரன் (27). இவர் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்தார். இவருடைய நெருங்கிய நண்பராக இதே ஊரைச் சார்ந்த மணிவண்ணன் மகன் தமிழரசன் (26) என்பவர் உள்ளார்.
இந்ந நிலையில் கடந்த செப்டம்பர் 19.9.2024 தேதி வீட்டிலிருந்து வெளியில் போனவர் வீடு திரும்பவில்லை. தெரிந்த நண்பர்கள் உறவினர் வீடுகளில் தேடி பார்த்ததில் எங்கும் கிடைக்கவில்லை என முத்துகுமாரின் தந்தை முருகன் (63) திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்கு பதிந்து காணாமல் போன முத்துக்குமரன் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். பல மாதங்களாக போலீசார் இந்த வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்
அதன் பிறகு முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் முத்துக்குமாரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் தமிழரசன் (26) என்பவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பது தெரிய வந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாரின் தந்தை முருகன் தன்னுடைய விவசாய நிலத்தில் பயிர் செய்த சவுக்கை மரம் வெட்டிய பணத்தை ரூ.8 லட்சத்தை தன்னுடைய மகன் முத்துக்குமார் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். குடும்ப செலவிற்கு பணம் தேவைப்படுவதால் முத்துக்குமார் தன்னுடைய நண்பன் தமிழரசனை ஆனத்தூரில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொடுப்பதற்காக வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது முத்துக்குமாரிடம் நயஞ்சகமாக காசோலையில் கையெழுத்து வாங்கி தமிழரசன் தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். அதன் பிறகு அந்த பணத்தை முத்துக்குமாரிடம் கொடுக்காமல் நான்கு மாதங்களாக இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் முத்துக்குமாரின் தந்தை முருகன் பணத்தை வங்கிக்கு சென்று எடுக்கலாம் வா என தமிழரசனை கூப்பிட்டுள்ளார். அப்போது தமிழரசன் வங்கியில் நெட் பிராப்ளம் உள்ளது என்றும், சந்தேகமாக இருந்தால் விக்கிரவாண்டியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று விசாரித்துக் கொள்ளலாம் என கூறி முத்துக்குமாரை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு அங்கு இங்குமாக அலைய வைத்து, திரும்பவும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் ஆனத்தூரை அடுத்த சேமங்கலம் மலட்டாறு பகுதி அருகே வந்தபோது தமிழரசன் மலம் கழிக்க செல்லலாம் என்று கூறி தமிழரசன் தன்னுடைய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நீ என்னுடைய செக்கில் நயவஞ்சகமாக கையெழுத்து வாங்கி பணத்தை உன்னுடைய அக்கவுண்டில் மாற்றிக்கொண்டு, பணம் கொடுக்காமல் என்னை ஏமாற்றி வருகிறாய் எனக் கூறி கோபமாய் கேட்டாதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழரசன் முத்துக்குமரனை பிடித்து டூவீலரில் தள்ளி தாக்கினார். அப்போது தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு கையில் வைத்திருந்த ராடால் தலையில் அடித்ததில் அங்கேயே உயிரிழந்தார். சிறிது நேரத்தில் இறந்து விட்டதாக அறிந்து தனது நிலத்து அருகே உள்ள மலட்டாறு வாய்க்கால் கரை ஓரமாக முத்துக்குமாரின் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்றது அம்பலமானது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக போலீசார் தமிழரசனை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், வட்டாட்சியர் செந்தில்குமார், தடவியல் நிபுணர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து முத்துக்குமார் உடல் புதைக்கப்பட்ட சேமங்கலம் மலட்டாறு இடத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்னர் . காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மலடாரின் பல இடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி தேடி வந்தனர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்துக்குமரனின் தாய் வள்ளி கூறியதாவது:
எனது மகன் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி காணாமல் போய்விட்டார் இது சம்பந்தமாக போலீசில் புகார் செய்தோம். புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் மகனை பல இடங்களில் தேடினோம். அப்போது எங்களுடன் தமிழரசனும் தேடுவது போல் வந்து நடித்துக் கொண்டு எங்களுடனே வந்தான். அவன் மீது எங்களுக்கு சந்தேகம் வந்தது. போலீசில் புகார் செய்தால், போலீசார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்து விடுவோம் என்று கூறி மிரட்டினர். பணத்திற்காக எங்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று நல்லவன் போல் நடித்து வந்துள்ளான். 19ந் தேதி காலை சேமங்கலம் மலட்டாறு வயல்வெளி ஓரமாக பள்ளம் தோண்டி அந்த மணலை வீட்டிற்கு இருவரும் எடுத்துச் சென்று கொட்டி வந்துள்ளனர். அதன் பிறகு பல இடங்களுக்கு அவனை அழைத்துச் சென்று விட்டு மாலை நேரத்தில் மலட்டாறு வயல் வெளிக்கு அழைத்து சென்று அங்கே இவனை அடித்து ராடல் அடித்து கொலை செய்து விட்டனர். தன்னுடைய பிணத்தை புதைப்பதற்கு தன்னாலே பள்ளம் தோண்டி அந்தப் பள்ளத்திலேயே புதைத்து விட்டான் என தாய் கூறினர்.