திமுக மகளிர் அணி எங்கே? எம்.பி கனிமொழி எங்கே? பெண்கள் ஃபுட்பால் கிடையாது - குஷ்பூ ஆவேசம்
ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது எந்த கட்சியினரும் பேசலாம்.
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக மகளிர் அணி மவுனம் காப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ “தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது, கட்சியைத்தான் பெரிது படுத்துகிறீர்கள். ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது எந்த கட்சியினரும் பேசலாம். நாங்கள் இருப்பது பாஜக அலுவலகம். ஆனால் நாங்கள் பாஜக சார்பாக பேச கிடையாது. எங்கள் பின்னால் பாஜக இருக்கிறது. அது வேற விஷயம். தயவுசெய்து அரசியல் ஆக்காதீர்கள். நீங்கள் ஆளும் மாநிலங்களில் இது நடக்கலையா என்று கேள்வி கேட்காதீர்கள். பெண்கள் அரசியல் ஃபுட்பால் கிடையாது. இங்கேயும் அங்கேயும் தூக்கி வீசுவதற்கு. பாதிக்கப்பட்ட பெண்ணை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தைரியமாக வெளியே சொன்னார். நிறைய பெண்கள் வெளியே சொல்ல மாட்டேங்குறார்கள். என்னமாதிரி வேறு பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்த அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். அந்த பெண் பற்றிய தகவல்களை வெளியே யார் கொடுத்தது? அவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். சட்டரீதியாக தவறுதான். ஏன் அதுப்பற்றி பேசக்கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் கேள்வி கேட்போம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு பாஜக மகளிரணி நாளை பேரணி நடத்துகிறது. நான் மகளிர் ஆணையத்தில் இருந்திருக்கிறேன். ரொம்ப மோஷமாக புகார்கள் வரும்.
மற்ற மாநிலங்களை கம்பேர் பண்ணாதீங்க. என் வீட்டில் பிரச்சினை நடக்கும்போது மற்ற வீட்டில் நடக்குதா இல்லையா என பேசக்கூடாது. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்கள் வீட்டில் கல் வீசக்கூடாது. சௌமியாவை ஏன் கைது செய்தீர்கள். கனிமொழி எங்கே? எல்லாத்துக்கும் முன் வந்து பேசுவாங்களே! திமுக மகளிர் அணி எங்கே? கைதுக்கு நாங்கள் பயப்படவில்லை. திமுக சார்பாக எந்த பெண் குரல் கொடுத்தார்கள். அமைச்சர், எம்.பி யாராவது குரல் கொடுத்தார்கள்?
சீமான் பற்றி பேசவிரும்பவில்லை. அவரை முதல்வரை பார்த்து கேள்வி கேட்க சொல்லுங்கள்.
மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? எங்கேவாவது பேசுனாங்களா? அரசு சொல்வதைதான் அவர்கள் செய்வார்கள். யார் அந்த சார்? அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.