விழுப்புரம் அருகே அரசு இடத்தை சொந்தம் கொண்டாடுவதில் இருதரப்பினர் இடையே மோதல் - 6 பேர் கைது
அரசு இடத்தை சொந்தம் கொண்டாடுவதில் இருதரப்பினர் இடையே மோதல். உருட்டுக்கட்டை, கத்தியால் தாக்கிகொண்டவர்கள் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள பள்ளிந்தூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை சொந்தம் கொண்டாடுவதில் இருவருக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் கத்தியால் மூவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள பள்ளியந்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சார்ந்த ஸ்ரீதர் என்பருக்கும் 3 செண்ட் புறம்போக்கு இடம் யாருக்கு சொந்தம் என பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் சுரேசின் உறவினர் பச்சமுத்து பள்ளியந்தூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீதர், கவின்குமார் ஆகிய இருவரும் அவரை பார்த்து திருநங்கை என கேலி செய்துள்ளனர். இதனை சுரேஷ் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டி உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றால் தாக்கிக்கொண்டதோடு கத்தியாலும் வெட்டிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் சுரேஷ், குப்பு, சுனில்குமார், சங்கர், பிரதீப் மற்றும் மோகன்ராஜ், சிவகாமி ஆகிய 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் ஸ்ரீதர், கவின்குமார், மோகன்ராஜ் சக்கரவர்த்தி சன்னியாசி ஆறுமுகம் கணேசன் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், கவின்குமார், மோகன்ராஜ், சக்கரவர்த்தி, சன்னியாசி, கணேசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அதேபோல் மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில் சுனில்குமார், அய்யப்பன், சுரேஷ், அபுன், சண்முகம், பசுபதி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - புதுச்சேரியில்அதிர்ச்சி
மீண்டும் பள்ளிக்கு போகலாம்...48 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு- விழுப்புரத்தில் நெகிழ்ச்சி