வாணியம்பாடியில் கல்லூரி மாணவன் மீது கொடூர தாக்குதல்! பணம் கேட்டு தாயையும் தாக்கிய கும்பல்: அதிர்ச்சி தகவல்!
6 பேர் கொண்ட கும்பல் புர்ஹானின் வீட்டிற்கு சென்று, ஆபாச வார்த்தைகளால் இருவரையும் திட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

வாணியம்பாடியில் கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு தகராறு செய்து மாணவன் மற்றும் அவரது தாயை வீடு புகுந்து இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயங்களுடன், தாய் மற்றும் மகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபணா. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன், வசித்து வரும் நிலையில் ரூபணாவின் முதல் மகனான புர்ஹான் என்பவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில், படித்து வரும் நிலையில், நேற்று (21) மாணவன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது, சில இளைஞர்கள், புர்ஹானை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டு மிட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து புர்ஹான் பணம் இல்லையெனக்கூறவே அந்த இளைஞர்கள் புர்ஹானின் செல்போனை பறித்துப் சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து புர்ஹான் இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்த நிலையில், மீண்டும் நேற்று (21) இரவு 6 பேர் கொண்ட கும்பல் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள புர்ஹானின் வீட்டிற்கு சென்று, ஆபாச வார்த்தைகளால், புர்ஹான் மற்றும் அவரது தாயை திட்டி, இரும்பு கம்பியால் இருவரையும் சரமாரியாக தாக்கி வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இளைஞர்கள் படுகாயமடைந்த புர்ஹான் மற்றும் ரூபணாவை மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து புகாரின் பேரில் இந்நிகழ்வு குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவன் புர்ஹான் மற்றும் அவரது தாயை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு மிரட்டி, மாணவனின் வீட்டிற்கு சென்று மாணவன் மற்றும் அவரது தாயை இளைஞர்கள் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















