மேலும் அறிய

போலி பட்டா விவகாரம்: சிறையில் இருந்த இருவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை!

அரசு நிலத்தை போலி பட்டா மூலம் நஷ்ட ஈடு பெற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரணை.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டு தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது.

போலி பட்டா விவகாரம்: சிறையில் இருந்த இருவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை!
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் இழப்பீட்டு தொகையாக சுமார் ₹200 கோடியை முறைகேடாக பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.ஆனால், முறையாக ஆவணங்களை சரி பார்க்காமல் போலி பட்டா வைத்திருந்த சுமார் 70 நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ₹200 கோடி இழப்பீட்டு தொகை வழங்கியது தமிழக நில நிர்வாக ஆணையத்திற்கு கடந்தாண்டு தெரியவந்தது. இது தொடர்பாக தற்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். 

போலி பட்டா விவகாரம்: சிறையில் இருந்த இருவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை!
அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால், அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், பீமன்தாங்கல் கிராமத்தில் பட்டா பெற்றிருந்த 37 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டது.  காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில், மேலும், 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது. 

போலி பட்டா விவகாரம்: சிறையில் இருந்த இருவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை!
பல ஆண்டுகளுக்கு முன்பாக, அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக அவை இருந்துள்ளன. இதனால், அந்த 46 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாவையும் சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கப்பட்ட கிராமங்களில், போலி பட்டா குறித்து விசாரிக்க, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி தாமல் வரை 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

போலி பட்டா விவகாரம்: சிறையில் இருந்த இருவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை!
 இதில், வேறு யாராவது போலி பட்டா வைத்து இழப்பீடு தொகை பெற்றனரா என ஆராய, 6 வருவாய் துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆய்வு நடத்தி, அதற்கான அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையில், போலி பட்டா மூலம் யாருக்காவது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு இழப்பீடு பெற்றது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று 83 நபர்களில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதில் 126 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. 
 
போலி பட்டா விவகாரம்: சிறையில் இருந்த இருவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை!
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 30 கோடி பெற்ற ஆசிஸ் மேத்ரா மற்றும் 3 கோடி பெற்ற செல்வம் இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இருவரையும் நீதிமன்ற அனுமதியுடன் இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Embed widget