மேலும் அறிய

சென்னையில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் கலாட்டா: இருவர் கைது!

"சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்."

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு, 186 பயணிகளுடன் கோலாலம்பூர் நோக்கி 'ஏர் ஏசியா - 3' விமானம் புறப்படத் தயாரானது. விமானம் ஓடுதளத்தில் செல்லத் தொடங்கியபோது, அதே விமானத்தில் பயணித்த மலேசியக் குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார் (35) மற்றும் பிரசாந்த் (36) ஆகிய இருவரும் போதையில் ஒருவருக்கொருவர் சட்டையைப் பிடித்து சண்டையிட்டுக் கொண்டனர்.

விமானப் பணியாளர்களின் நடவடிக்கை

இந்தச் சண்டையைக் கண்ட விமானப் பணியாளர்கள், அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் இருவரும் அதையும் மீறி ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகுந்த மது போதையில் இருந்ததைக் கவனித்த பணியாளர்கள், உடனடியாக விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து உதவி கோரினர். இதனைத் தொடர்ந்து, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே நுழைந்து அந்த இரு பயணிகளையும் வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதனால், அவர்களின் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

விமான நிலைய போலீசாரின் விசாரணை

இந்தச் சம்பவத்தால் விமானம் புறப்படுவது ஒன்றரை மணி நேரம் தாமதமானது. பின்னர், 184 பயணிகளுடன் அந்த விமானம் நேற்று அதிகாலை 1:10 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையில், கலாட்டாவில் ஈடுபட்ட இருவரையும் விமான நிலையப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கைதான இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சில ஆண்டுகளுக்கு முன்பே மலேசியா சென்று குடியுரிமை பெற்றவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் தங்கள் சொந்த ஊரில் நடந்த திருமண விழாவிற்காகத் தமிழகம் வந்திருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget