மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது - விட்ட பணம் கிடைக்குமா.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.

பல ஆயிரம் கோடியில் விளையாடிய நிறுவனம்
 
வேலூரை தலைமை இடமாகக் கொண்டு ஐஎப்எஸ் என்ற பெயரில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் நிதி நிறுவனம் கடத்த சில ஆண்டுகளாகவே செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என மாநிலம் முழுவதும் கிளைகளை தொடங்கினர். இதன் பங்குதாரர்கள் மற்றும் சகோதரர்கள் லட்சுமி நாராயணன், தேவ நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் என 4 பேரும் , கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து மாநிலம் முழுவதும் 89 ஆயிரம் பேரிடம், ரூ.5,900 கோடி ஐஎப்எஸ் நிறுவனத்தில் முதலீடு பெற்றனர். இதுவரை நேரடியாக புகார் அளித்தவர்களின் கணக்கு பட்டியல் 5900 கோடி என்றாலும், சுமார் 15 லிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை இந்த நிதி நிறுவனம் பெற்றதாக கூறப்படுகிறது. 

காஞ்சிபுரத்தில் ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது - விட்ட பணம் கிடைக்குமா.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
 
வழக்கை விசாரித்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
 
இவ்வாறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் நிறுவனங்கள் ஆரம்ப கட்டத்தில், எப்படி சரியாக செயல்பட்டு வருமோ அதே போல், இந்த நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென இந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சில மாதங்கள் பணம் தராமல் நிறுத்தியதாக கூறப்படுகிறது.  இதனால், முதலீட்டாளர்கள் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். பெரிய அளவில் நடந்த பொருளாதார மோசடி என்பதால் வழக்கு, மாநில பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். 
 
ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உத்தரவு
 
இதனை அடுத்து காவல்துறையினர் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மற்றும் அதன் 5 துணை நிறுவனங்கள், இயக்குநர்களான லட்சுமி நாராயணன், வேத நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் உட்பட 10 இயக்குநர்கள், 3 முக்கிய ஏஜென்டுகள் என மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் முக்கிய ஏஜெண்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், நிதி நிறுவனத்தின் 5 பங்குதாரர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
சொத்துக்களை முடக்கி நடவடிக்கை
 
 அதைதொடர்ந்து இந்நிறுவனத்தின் இயக்குனர், ஏஜென்ட் வீடுகள் என 31 இடங்களில் சோதனை நடந்தது. இதில், ரூ.1.12 கோடி ரொக்கம், ரூ.34 லட்சம் தங்கம், 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த நிறுவனத்தின் 791 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.121.54 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.12.23 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இருவர் கைது
 
இந்தநிலையில், காஞ்சிபுரம் அடுத்துள்ள பெரிய கரும்பூர், பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் பிரபு, இவர்கள் இருவரும் சகோதரர்கள். இருவரும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காரை, கோவிந்தவாடி அகரம், பரந்தூர், பொன்னேரிக்கரை, ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் அடிக்கடி வெங்கடேசன் மற்றும் பிரபு ஆகியோரிடம் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு, நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பணம் கட்டியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும் என சகோதரர்கள் இருவரும் வாட்ஸப்பில் தகவல் அனுப்பியுள்ளனர்.
 
காஞ்சிபுரத்தில் ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது - விட்ட பணம் கிடைக்குமா.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
 
இந்த தகவல் வேகமாக பரவ அந்த சுற்றுவட்டார பகுதியில் பணம் கொடுத்து ஏமார்ந்த பொதுமக்கள் அனைவரும் அவர் வீட்டின் அருகே கூடியுள்ளனர். அப்பொழுது முழு தொகை கொடுக்க முடியாது ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே தருவேன் என கூறியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் இருந்த பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவல் காஞ்சிபுரம் பாலுச்செட்டி காவல் நிலையத்திற்கு தகவல்,  தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து காவல் நிலையத்தில் விசாரித்தனர் . மேலும் இது பொருள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திவரும் வழக்கு என்பதால் , இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து இருவரையும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை அழுத்தி சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றன
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Embed widget