ஆரணி அருகே மாடு திருடியவரை பொறிவைத்து பிடித்த போலீஸ்
ஆரணி அருகே பசுமாடு திரடியவரை காவல்துறையினர் பொறி வைத்து பிடித்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் வயது (45), விவசாயம் செய்து வருகின்றார். அதேபகுதியை சேர்ந்த குமரவேலு வயது ( 42) விவசாயம் செய்து வருகிறார். இருவரின் பசு மாடுகள் வீட்டில் கட்டி வைத்திருந்தனர். அதிகாலையில் வீட்டின் பின்புறம் இவர்கள் வந்து பார்த்த போது பசுமாடுகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து இருவரும் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில், ஆரணி தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் பி.புகழ், துணை ஆய்வாளர் ஷாபுதீன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
Pan Aadhar Linking : ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது... வருவமான வரித்துறை அதிரடி அறிவிப்பு...!
இந்த நிலையில் இருவரது பசு மாடுகளும் இராந்தம் கொரட்டூர் கிராமத்தில் சதீஷ் என்பவருடைய வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் வயது (35) என்பவர் மினி வேனில் மாடுகளை திருடியுள்ளதை விற்பனை செய்வதற்காக சென்று விட்டு வருவதாக சதீஷ் தெரிவித்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சுரேஷுக்கு மாடுகளை விற்க செல்ல உடனே வரும்படி சுரேசுக்கு போனில் கூறும்படி காவல்துறையினருக்கு தெரிவித்தனர். அதன்படி சதீஷ் போன் செய்யவே மாடுகளை ஏற்றிக்கொண்டு விற்க செல்வதற்காக சுரேஷ் மினிவேனை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
அப்போது சுரேஷை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் சுரேஷிடம் இருந்து 2 பசு மாடுகளையும் மீட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். பின்னர் மினிவேனை பறிமுதல் செய்து சதீஷ், சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது தாலுக்கா காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆரணி சுற்றுவட்டப் பகுதியில் பல்வேறு இடங்களில் சதீஷ், சுரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து பல்வேறு நபர்களின் பசுமாடுகள் மற்றும் காளை மாடுகளை திருடி சென்று பல இடங்களில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் சதீஷ், சுரேஷ் ஆகிய இரண்டு நபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பசுமாடு திருடர்களை காவல் துறையினரை பொறிவைத்து பிடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவல்துறையினரை விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.
Yellow warning: 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்.. எச்சரித்த வானிலை மையம்..!