மேலும் அறிய

திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருட முயற்சி ; கோவில் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

இன்று அதிகாலை நேரத்தில் அர்ச்சகர்கள் கோவில் நடையை திறந்துள்ளனர். அப்போது கோவிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததும், கோவிலுக்குள் உள்ள இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்துள்ளதும் தெரியவந்தது.

திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு முயற்சி மற்றும் கோவில் சேதப்படுத்தப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று அதிகாலை நேரத்தில் அர்ச்சகர்கள் கோவில் நடையை திறந்துள்ளனர். அப்போது கோவிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததும், கோவிலுக்குள் உள்ள இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்துள்ளதும் தெரியவந்தது. மேலும் தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலைகள் மீது அணிவித்துள்ள துணிகள் மற்றும் அவிநாசிலிங்கேசுவரர் மீது இருந்த பொருட்கள் மற்றும் துணி களைந்துள்ளதை கண்டு அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருட முயற்சி ; கோவில் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கும், அவிநாசி காவல் துறையினருக்கும் அர்ச்சகர்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர். இதில் முருகன் சன்னதியில் வெண்களத்தால் செய்த வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப்பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது. இதனிடையே கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒருவர் ஒளிந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை பிடித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவிநாசியை அடுத்து சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி (32) என்பதும், இன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவனிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி வேல் மற்றும் உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சரவண பாரதியை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பினர் கோயில் முன்பு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் இன்று கோயிலில் கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை, பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை.  இதனால் பக்தர்கள் வேதனையடைந்தனர். இந்த சம்வவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை ண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
Embed widget