மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரி: சிசிடிவி உதவியால் பிடிபட்ட 3 திருடர்கள்...நடந்தது என்ன?
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பணம், 7 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்டுகள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பணம், 7 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்டுகள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட, போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் மாவட்டம் முழுவதும் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். அவர்களை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு அதன் பதிவுகளை வைத்து தொடர் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை பிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையர்கள் குறித்த அடையாளங்கள் தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை
மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக வினு, பேச்சிமுத்து, சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பணம், 7 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்டுகள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வினு மீது 7 வழக்குகள் உள்ளது. இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பை வண்டி ஓட்டி வருகிறார். பேச்சிமுத்து மீதும் களக்காடு பகுதியில் வழக்குகள் உள்ளது. இவர் சுசீந்திரம் அழகப்பபுரம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை வண்டி ஓட்டி வருகிறார். சந்தோஷ் அப்டா மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேறு ஏதாவது கொள்ளை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூதப்பாண்டி, குழித்துறை பகுதியில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கிரிக்கெட்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion