செல்போன் பேசிக்கொண்டு இருந்ததால் ஆத்திரம்...! மாமியார் வீட்டில் இருந்த மனைவியை கொடுரமாக வெட்டி கொன்ற கணவன்
கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து மனைவியை தனது நண்பர்கள் உதவியுடன் இழுத்த பொன்ராஜ் மனைவியின் தலையை காலுக்குள் இடையில் வைத்து கழுத்திலேயே சரமாரியாக குத்தி உள்ளார்
தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர் சண்முகம்- மாரியம்மாள் தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10வது தெரு சேர்ந்த பொன்ராஜ் (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. பொன்ராஜ் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான நாளில் இருந்து மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பொன்ராஜ், மனைவியை கடந்த வாரம் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் விட்டு விட்டாராம். சில நாட்களுக்கு பின்னர் மாரியம்மாள் மருமகன் பொன்ராஜிக்கு போன் செய்து மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாராம். ஆனால், அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டாதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவில் பொன்ராஜ் தனது நண்பர்கள் முத்துக்குமார், மந்திரமூர்த்தி ஆகியோருடன் மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டின் கதவை தட்டி உள்ளார், யார் என கேட்டதும் பொன்ராஜ் தான் என சொல்லி உள்ளார். இதனை தொடர்ந்து கதவை திறந்த மனைவி மாரிசெல்வி,பொன்ராஜ் மனைவியை வீட்டுக்கு வா என அழைத்து உள்ளார், அதற்கு இப்போது இரவு என்பதால் பயமாக உள்ளது காலை வருகிறேன் என கூறியுள்ளார். அப்போது பொன்ராஜ் திடீரென கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து மனைவியை தனது நண்பர்கள் உதவியுடன் இழுத்த பொன்ராஜ் மனைவியின் தலையை காலுக்குள் இடையில் வைத்து கழுத்திலேயே சரமாரியாக குத்தியதுடன் சராமாரியாக வெட்டியும் உள்ளார்.
இதனை தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் மாரிச் செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட மாரிசெல்வி உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த தாயார் மாரியம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் . இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாரி செல்விக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் அவரது மரணம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை தொடர்பாக இது தொடர்பாக பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான முத்துக்குமார், மந்திரமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.