மேலும் அறிய

தூத்துக்குடியில் பயங்கரம்..... மிளகாய் பொடித் தூவி கணவன், மனைவி வெட்டிக்கொலை

கிறிஸ்துமஸ் நன்னாளில் இந்த சம்பவம் நடந்தது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராம்குமார் (வயது 42) இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 39). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் மாரியம்மாளின் உடன் பிறந்த அண்ணன் முருகேசன் 50 என்பவருக்கும், மாரியம்மாளுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் சொத்துக்கள் அனைத்தும் மாரியம்மாள்  பெயருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் (வயது 20) இருவரும் கடும் ஆத்திரமடைந்தனர். இதனால் இருவரும் சேர்ந்து  ராம்குமார் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் 2 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டனர்.

தூத்துக்குடியில் பயங்கரம்..... மிளகாய் பொடித் தூவி கணவன், மனைவி வெட்டிக்கொலை
 
இந்த நிலையில், இரவு 8 மணி அளவில் ராம்குமார் தனது மோட்டார் பைக்கில் அண்ணா நகர் 6வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் அவரது மகன் மகேஷ் இருவரும் சேர்ந்து மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவினார்கள். இதில் ராம்குமார் நிலை தடுமாறி கீழே விழவும் அவரை இருவரும் சேர்ந்து சரமரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் ராம்குமார் அதே இடத்தில் பரிதாமாக இறந்தார். பின்னர் இருவரும் மாரியம்மாள் வீட்டுக்கு சென்றனர். அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த மாரியம்மாள் மீதும் மிளகாய் பொடியை தூவி அவரையும் சரமரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் மாரியம்மாள் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் கெங்கநாத பாண்டியன், சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று 2 பேர் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ் பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் பயங்கரம்..... மிளகாய் பொடித் தூவி கணவன், மனைவி வெட்டிக்கொலை
மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கணவன் மனைவியை கொலை செய்த முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இரு வரையும் தேடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் நன்னாளில் இந்த சம்பவம் நடந்தது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 
 

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget