மேலும் அறிய
Advertisement
திருவாரூர்: பயிர்க்காப்பீடு வழங்கியதில் 6.5 லட்சம் முறைகேடு - கூட்டுறவுசங்கத் தலைவர் பணிநீக்கம்
’’தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தரிசு நிலத்திற்கு பொய் சான்றிதழ் வழங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் ஏற்கெனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்’’
திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் தப்பளாம்புளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் விவசாய கடன், நகைக்கடன், பயிர்கடன், உள்ளிட்ட கடன் வசதிகள் விவசாயிகளுக்கு இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2018-19 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக அப்பொழுது வழங்கப்பட்டு வந்தது. இதில் அலிவலம் கிராமத்தைச் சேர்ந்த 12 நபர்களின் தரிசு நிலத்திற்கு விவசாயம் செய்ததாக கூறி பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மற்றும் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை என்பது நடைபெற்று வந்தது.
ஏற்கனவே தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தரிசு நிலத்திற்கு பொய் சான்றிதழ் வழங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் லதாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கியதன் மூலம் 6.5 லட்சம் முறைகேடு நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் ஊழியர்கள் இயக்குனர் ஆகியோரிடம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் சார்பில் வழங்கப்பட்ட பயிர் கடன், விவசாய நகை கடன், பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கியது, சேமிப்பு கணக்குகள், நிர்வாகக் குழுவின் நிர்வாக குறைபாடுகள், பொதுவிநியோகத் திட்ட குறைபாடுகள் ஆகியவை தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81 விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போதைய நிர்வாகத்தின் தலைவரான ரவி என்பவர் இவ்விசாரணையில் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளதால் இதுநாள் வரை நிர்வாக குறைபாடுகள் கலையாமல் குறைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஏற்பட்ட நிதி இழப்பீடு வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையிலும் தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் கொடுத்துவரும் புகாரின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே தப்பளாம்புளியூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ரவியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.
இது கூறித்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் லதாவிடம் கேட்கையில், கூட்டுறவு சங்கத் தலைவர் ரவி சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது, சங்கத்தின் நம்பிக்கை மோசடி செய்தது, சங்கத்தை தவறாக வழி நடத்தியது, குற்ற நோக்குடன் பொய்யான ஆவணங்களை தயாரிக்க காரணமாக இருந்தது, தவறான நடத்தையுடன் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சங்கத்தின் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சங்கத்தில் நடைபெற்ற 83 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81ன் கீழான விசாரணை முடியும் வரையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 66-A இன்படி தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் மேலும் தற்சமயம் சங்கத்தின் துணைத்தலைவர் தங்கையன் என்பவர் தலைவர் பொறுப்பில் செயல்படுவார் எனவும் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion