Crime | திருவனந்தபுரத்தில் வாங்கிய கார்.. அடுத்த நொடியில் மாயம்... விற்ற நபரே திட்டம்போட்டு சுட்ட கதை...!
கேரளாவை அடுத்த திருவனந்தபுரத்தில் இணையதளம் வாயிலாக காரை விற்பனை செய்துவிட்டு அந்த காரை, 'டூப்ளிகேட் சாவி மூலம் திருடி மீண்டும் விற்ற மூவர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் சமீபகாலமாக ஆன்லைன் மூலம் பல மோசடி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றனர். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஏன் பொருட்கள் வரை ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இதன்காரணமாக சைபர் க்ரைம் குற்றவாளிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் தற்போது மேலும் ஒரு மோசடி செயல் நடைபெற்றுள்ளது. கேரளாவை அடுத்த திருவனந்தபுரத்தில் இணையதளம் வாயிலாக காரை விற்பனை செய்துவிட்டு, அதே காரை, 'டூப்ளிகேட் சாவி மூலம் திருடி மீண்டும் விற்ற மூவர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே நெடுமங்காட்டை சேர்ந்தவர் விஷ்ணு. ஒரு இணையதளத்தில் கார் விற்பனை விளம்பரத்தை பார்த்து, அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அந்த குறிப்பிட்ட கார் கோழிக்கோட்டில் இருப்பதாக கூறியதை அடுத்து, விஷ்ணு அங்கு சென்று இக்பால் என்பவரை சந்தித்தார்.
Also Read | Rasi Palan Today, Feb 17: மேஷத்துக்கு எச்சரிக்கை.. மீனத்துக்கு அமைதி.. இன்றைய உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ..
அவரிடம் காரை 1.40 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய விஷ்ணு, காருடன் திருவனந்தபுரத்துக்கு கிளம்பினார். வழியில் கொச்சி அருகே ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது கார் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து, கார் குறித்து விஷ்ணு காவல்துறையினருடன் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு 'கேமரா'வில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்பொழுது, அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது காரை விஷ்ணுவிடம் விற்ற இக்பால் உட்பட மூவர் காரை எடுத்து செல்வது அந்த சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இக்பால், முகம்மது சாஹில், மோகன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் காரை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மூவரிடம் நடத்திய விசாரணையில் விற்ற கார் மூலம் கிடைத்த பணத்தில் ஜாலியாக இருந்து வந்தாகவும், இதுபோல் பலரை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்