Rasi Palan Today, Feb 17: மேஷத்துக்கு எச்சரிக்கை.. மீனத்துக்கு அமைதி.. இன்றைய உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ..
Rasi Palan Today, February 17 | இன்றைய ராசிபலன் 17 பிப்ரவரி 2022: இந்த நாள் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்பதை கீழே காணலாம்.
நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 4.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 12.30 மணி முதல் காலை 1.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை :
காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை
எமகண்டம் :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பெருமைப்படும் அளவிற்கு இருக்கும். வாகனம் ஓட்டும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவளிக்க நேரம் கிடைக்கலாம். பொறுமையுடன் அனைத்தையும் அணுகுங்கள்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு போட்டியுடன் தொடங்கும். இதனால், பதற்றம் அடைய வேண்டாம். எதையும் நிதானத்துடன் யோசித்து செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள சச்சரவுகள் நீங்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் சிறப்பானதாக இருக்கும். அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் இனிமையாக அமையலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சோம்பலாக தொடங்கினாலும், பிற்பகலுக்கு மேல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். நன்மைகள் அதிகரிக்கும். அண்டை அயலாருடன் வீண் பேச்சுகள் தவிக்க வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமையும். வெளியில் செல்லும்போது தண்ணீரு குடித்துவிட்டு செல்லுங்கள். போற காரியம் நன்றாக அமைய விநாயகரை வழிபடுங்கள்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நிறைவை கொடுக்கும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். சொந்தங்கள் இடையே ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருக்க வேண்டும்
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். வெற்றி தேடி வரும். தோல்விகள் பயந்து ஓடும். விளையாட்டாக பேசி வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் மூலம் ஆதரவு பெருகும். முன்கோபத்தை தவிருங்கள். இனிமையான பயணம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாகவே அமையும். புகழ் இல்லம் தேடி வரும். வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். சோம்பேறித்தனத்தை விட்டால், முன்னேற்றம் ஏற்படும்.
மகரம் :
மகர ராசிக்கார்களே இந்த நாள் அமைதியாக இருப்பதே உங்களுக்கு நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். மனதில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கும். சாய் பாபாவை வணங்கினால் நன்மைகள் உண்டாகும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே எதிலும் அவசர வேண்டாம். நிதானத்துடன் செயல்படுங்கள். மனதில் பயம் தோன்றினாலும், சிவனை வழிபடுங்கள். நன்மைகள் உண்டாகும்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமைய கோபத்தை விட வேண்டும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மனம் அமைதியுடன் இருக்க சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.