மேலும் அறிய

Theni: குடும்ப பிரச்னையால் தற்கொலை முயற்சி; இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்

குடும்ப பிரச்சனையில் கிணற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றதில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு.கணவன், மனைவி, மகன் ஆகிய மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

போடி அருகே குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது. கணவன், மனைவி, மகன் ஆகிய மூன்று பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Earthquake: தொடர் நிலநடுக்கங்கள்… 21 ஆம் நூற்றாண்டில் உலகை உலுக்கிய கொடிய நிலநடுக்கங்கள் பட்டியல்!

Theni: குடும்ப பிரச்னையால் தற்கொலை முயற்சி; இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்

தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிப்புரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் ராமராஜ் (32). இவரது மனைவி வீரமணி (25). இவர்களது மகன் ராஜபாண்டி (6), ஈசாஸ்ரீ (4), ஜீவிதா ஸ்ரீ (2). ராமராஜ் குடும்பத்துடன் கேரள மாநிலம் பாரத்தோடு அருகே காரித்தோடு என்ற இடத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. சிறிது காலம் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

பெற்றோர் சமாதானப்படுத்தி அனுப்பியதன் பேரில் கேரளத்தில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் குல தெய்வக் கோவிலில் மொட்டை எடுப்பதற்காக மீண்டும் பொட்டிப்புரம் வந்துள்ளனர். கோவிலுக்கு சென்று மொட்டை எடுத்துவிட்டு வந்து கேரளத்துக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது.

TTV Dhinakaran:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் வாபஸ்: டிடிவி தினகரன் சொன்ன காரணம் என்ன?

இதில் செவ்வாய்க்கிழமை மாலை வீரமணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகே உள்ள தோட்டப் பகுதிக்கு சென்றுள்ளார். இந்திரா காலனி அருகே கிருஷ்ணசாமி என்பவரது கிணற்றில் குழந்தைகளை தள்ளிவிட்டு வீரமணியும் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.  இவர்களை தடுப்பதற்காக வந்த ராமராஜூம் இதனைக் கண்டு தற்கொலைக்கு முயன்று கிணற்றில் குதித்தார். 70 அடி கிணற்றில் தண்ணீர் இல்லாததால் 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

MNM : கஷ்டப்படும் கல்லூரி மாணவிகள்: கேரளாவை பின்பற்றுங்க! - தமிழ்நாடு அரசுக்கு மநீம வேண்டுகோள்!

Theni: குடும்ப பிரச்னையால் தற்கொலை முயற்சி; இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்
5 பேரும் கிணற்றில் விழுந்தது கண்டு அருகில் தோட்டங்களில் வேலை செய்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போடி தீயணைப்பு துறையினர், போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து 5 பேரையும் பலத்த காயங்களுடன் மீட்டனர். 5 பேரும் 108 அவசர ஊர்தி  மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஈசாஸ்ரீ (4), ஜீவிதாஸ்ரீ (2) ஆகியோர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று பேரும் ஆபத்தான நிலையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Embed widget