Earthquake: தொடர் நிலநடுக்கங்கள்… 21 ஆம் நூற்றாண்டில் உலகை உலுக்கிய கொடிய நிலநடுக்கங்கள் பட்டியல்!
இது போன்ற நிலநடுக்கங்கள் கிட்டத்தட்ட எல்லா வருடமும் பூமியில் எங்காவது தோன்றி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 21ஆம் நூற்றாண்டில், உலகின் மிக மோசமான பூகம்பங்களின் பட்டியல் இங்கே:
![Earthquake: தொடர் நிலநடுக்கங்கள்… 21 ஆம் நூற்றாண்டில் உலகை உலுக்கிய கொடிய நிலநடுக்கங்கள் பட்டியல்! Earthquake A series of earthquakes list of the deadliest earthquakes that shook the world in the 21st century Earthquake: தொடர் நிலநடுக்கங்கள்… 21 ஆம் நூற்றாண்டில் உலகை உலுக்கிய கொடிய நிலநடுக்கங்கள் பட்டியல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/1ab4739e2127318453c92d994347563f1675755086683109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
துருக்கியில் நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலையில், அதனால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 4 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற நிலநடுக்கங்கள் கிட்டத்தட்ட எல்லா வருடமும் பூமியில் எங்காவது தோன்றி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 21ஆம் நூற்றாண்டில், உலகின் மிக மோசமான பூகம்பங்களின் பட்டியல் இங்கே:
ஜூன் 22, 2022: ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 14, 2021: ஹைட்டியில், 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200க்கும் அதிகமானோர் பலி.
செப். 28, 2018: இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 4,300க்கும் அதிகமானோர் பலி.
ஆகஸ்ட் 24, 2016: மத்திய இத்தாலியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலி.
ஏப்ரல் 25, 2015: நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 3, 2014: சீனாவின் வென்பிங் அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் பலி.
செப். 24, 2013: தென்மேற்கு பாகிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மார்ச் 11, 2011: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமியைத் தூண்டியது, 20,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
பிப். 27, 2010: சிலியில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமியை உருவாக்கி 524 பேர் பலி.
ஜன. 12, 2010: ஹெய்ட்டியில், அரசாங்க மதிப்பீட்டின்படி, 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 3,16,000 பேர் கொல்லப்பட்டனர்.
செப்டம்பர் 30, 2009: இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 6, 2009: 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இத்தாலியின் எல்'அகுவிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது.
மே 12, 2008: சீனாவின் கிழக்கு சிச்சுவானில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் விளைவாக 87,500 பேர் இறந்தனர்.
ஆகஸ்ட் 15, 2007: மத்திய பெருவின் கடற்கரை அருகே 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலி.
மே 26, 2006: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 8, 2005: பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80,000 பேர் பலி.
மார்ச் 28, 2005: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 26, 2004: இந்தோனேசியாவில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடலில் சுனாமியைத் தூண்டியது, 12 நாடுகளில் 2,30,000 பேர் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 26, 2003: தென்கிழக்கு ஈரானில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் விளைவாக 50,000 பேர் இறந்தனர்.
மே 21, 2003: அல்ஜீரியாவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மார்ச் 25, 2002: வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டனர்.
ஜன. 26, 2001: இந்தியாவில் குஜராத்தில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 20,000 பேர் பலி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)