Crime: இறுதி ஊர்வல பிரச்சனையில் இளைஞர் வெட்டி படுகொலை - பெரியகுளத்தில் இருவர் கைது
பெரியகுளத்தில் இறுதி ஊர்வலத்தில் வெடி போட்டதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் இருவர் கைது.
இறுதி ஊர்வலத்தில் வெடி போட்டதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் பெரியகுளம் காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் மனோகரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். முன்னாள் ராணுவ வீரரின் இறுதி ஊர்வலம் நேற்றுமுன்தினம் மாலையில் நடைபெற்ற பொழுது, அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான அருண் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து வெடி போடும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெடி போட்டதை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பினரிடயே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பின்பு வெடி போட்ட அருண் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் தட்டிக் கேட்டவர்களை அரிவாளை கொண்டு தாக்க முற்பட்டதாகவும், வெடி போட்ட போது தட்டி கேட்ட இளைஞர்களுக்கும் சகோதரர்களான அருண் மற்றும் சூர்யா ஆகிய அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் அருண் என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் தப்பி ஓடியதாகவும், இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த அருணின் (அண்ணன்) சகோதரன் சூர்யா பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு சென்று தனது தம்பியை வெட்டி தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் அருண் என்ற இளைஞரை நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தப்பி ஓடி புதருக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்டனர். இறந்த அருணின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின் வழக்கு பதிவு செய்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து கொலை வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.