(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: பிரபல ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான கருங்காலி கட்டைகள் பறிமுதல்
வத்தலக்குண்டில் பிரபல ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள் பழமையான கோவில் கலசங்கள் பதுக்கல்.
வத்தலக்குண்டில் பிரபல ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள் பழமையான கோவில் கலசங்கள் பதுக்கி வைக்கப்பட்டது. வனத்துறையின் பறக்கும் படையினர் வியாபாரிகள் போல் சென்று பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த யோகேஷ் என்பவர் தலைமையிலான ஒரு கும்பல் போடி வனப்பகுதியில் கருங்காலி மரக்கட்டைகளை வெட்டி தொடர்ந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநில வனத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பறக்கும்படை அதிகாரி சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், கருங்காலி கட்டைகளை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் போல் போடியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில்,
அவர் போடி வனப்பகுதியில் வெட்டிய கருங்காலிக் கட்டைகளை வத்தலக்குண்டை சேர்ந்த தொழிலதிபர் சந்திரன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியதையடுத்து, அக்கும்பலிடம் ரூபாய் ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுப்பதாக கூறிய வனத்துறையினர் அதனை நேரில் பார்க்க வருவதாக கூறி வத்தலக்குண்டு காந்திநகரில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளர் சந்திரனின் பங்களாவில் பதுக்கி வைத்திருந்த கருங்காலி கட்டைகளை விலை பேச வந்துள்ளனர்.
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
அப்போது பங்களாவை சுற்றி வளைத்த வனத்துறையினர், அங்கு விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான கருங்காலி கட்டைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது தப்பியோட முயன்ற போடியைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் சந்திரனின் டிரைவர் சிவா ஆகிய இருவரையும் போடி வனத்துறையினர் சுற்றி வலைத்து பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர், மேலும் அதே பங்களாவில் மிகவும் பழமையான கோவில் கலசங்களையும் வனத்துறை பறக்கும் படையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களின் எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வத்தலக்குண்டில் தனியார் ஹோட்டல் உரிமையாளரின் பங்களாவில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ளான கருங்காலி கட்டைகள் மற்றும் கோவில் கலசங்களை வனத்துறையினர் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது