TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
மாநாட்டில் பார்கிங் வசதிக்காக 45 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் மேலும் 74 ஏக்கர் நிலத்தை ஏற்பாடு செய்யுமாறு காவல்துறை உத்தரவு.
![TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை? tvk vijay Shortage of space for the tamilaga vettri kazhagam vikravandi conference Association administrators are stifled TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/13/0f69eb2ddc22d332c169c8b526f48ded1728794490777113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் வி.சாலையில் பார்கிங் வசதிக்காக 45 ஏக்கர் ஒதுக்கபட்டுள்ள நிலையில் பார்க்கிங் வசதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் உள்ளே செல்லும் வழி வெளியே செல்லும் வழி எந்த எந்தெந்த இடத்தில் கார்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்பதை விழுப்புரம் ஏ.எஸ்.பி ரவீந்திரகுமார் குப்தா மற்றும் விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் ஆய்வு செய்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை தேசிய நெடுஞ்சாலை அருகே 85 ஏக்கர் பரப்பளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அரசியல் மாநாடு 27 ஆம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணியும், கிணறு அமைந்துள்ள பகுதியை இரும்பு கம்பிகள் மூலமாக மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி பகுதியில் விட்டு விட்டு பரவலான மழை பெய்து வருவதால் தரைப்பகுதியில் புற்கள் முளைத்துள்ளன. மேடை அமைந்துள்ள தரைப்பகுதியில் புற்கள் மேலும் வளராமல் இருக்கவும், புற்களை அழிக்க பணியாளர்களை கொண்டு களைக்கொல்லி அடிக்கப்பட்டன.
100 அடி கொடி கம்பத்தில் கொடி ஏற்றுகிறார் தலைவர் விஜய்
மேலும் 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்க உள்ளதால் அந்த பகுதிகளிலும் களைக்கொல்லி அடிக்கபட்டு வருகின்றன. மாநாடு அமைந்துள்ள பகுதியில் முகப்பு வாயிலில் தமிழக சட்டப்பேரவை போன்ற வடிவம் அமைக்கபட உள்ளதால் அந்த இடத்தில் 100 அடிக்கு கொடி கம்பம் அமைக்கபட்ட உள்ளது அதனால் அந்த பகுதியில் கம்பம் அமைப்பதற்கு பூமி பூஜையும் போடப்பட்டுள்ளது. இந்த 100 அடி உயரமுள்ள கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநாடு நடைபெறும் நாள் அன்று கட்சி கொடியினை முகப்பு வாயிலில் ஏற்றி வைத்த பின் உள்ளே சென்று மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழு, செயல்வடிவ குழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துக் குழுக்களுக்கான தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை பொதுச் செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
பார்கிங் வசதிக்காக கூடுதலாக 75 ஏக்கர் நிலம் வேண்டும்
பார்கிங் வசதிக்காக 45 ஏக்கர் ஒதுக்கபட்டுள்ள நிலையில் பார்க்கிங் வசதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் உள்ளே செல்லும் வழி வெளியே செல்லும் வழி எந்த எந்தெந்த இடத்தில் கார்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்பதை விழுப்புரம் ஏ.எஸ்.பி ரவீந்திரகுமார் குப்தா மற்றும் விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் ஆய்வு செய்தனர்.
மாநாட்டுக்கு 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் வருகை தர இருப்பதால் கூடுதல் இடங்களை ஏற்பாடு செய்ய அறியுறுத்தியுள்ளார். மாநாட்டிற்காக தற்போது 45 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் மேலும் 74 ஏக்கர் நிலத்தை ஏற்பாடு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)