Crime : இரிடியம் மோசடியில் பாதிக்கப்பட்டவர் தற்கொலை ; நெட்வொர்க்காக மோசடியில் ஈடுபடும் கும்பலா?
இரிடியம் மோசடியில் ஏமாற்றபட்டவர் தற்கொலை ; மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
மோசடிக்கு முகங்கள் இல்லை எந்த வகையிலும் மோசடி நடைபெறலாம். அந்த அளவிற்கு மோசடிக்காரர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்கின்றனர். ஆனால் அப்பாவி மக்கள் அவர்களது வலையில் மாட்டி மீளமுடியாமல் சிக்கிவிடுகின்றனர். பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் ஆசை வார்த்தையில் சிக்கும் நபர்கள் தங்களது பணத்தை ஏமாறுவதே மிச்சமாக உள்ளது. இந்நிலையில் இரிடியம் மோசடியில் ஏமாந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் குட்டி என்ற ராஜீவ்காந்தி (39)ஆறு வருடத்திற்கு முன் தேனி மாவட்டம் பொட்டல்களத்தைச் சேர்ந்த கவுரி மோகன்தாஸ் (50) என்பவர் கோபுர கலசத்தில் வைக்க கூடிய இரிடியம் உள்ளதாகவும் அதனை வாங்கி வெளிநாட்டில் விற்பனை செய்தால் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என சதுரங்க வேட்டை பட பாணியில் கூறியுள்ளார். இவரது பேச்சில் மயங்கிய ராஜிவ் காந்தி கடன் வாங்கி சுமார் மூன்று கோடி வரை கவுரி மோகன்தாசிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கவுரிமோகன்தாஸ் தலைமறைவாகி விட்டார். தேடி கண்டுபிடித்து மானாமதுரை அழைத்து வந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
கணவரை கடத்தி விட்டனர் என மோகன்தாஸ் மனைவி போடி போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து தேனி போலீசார் கடத்தியதாக ராஜிவ்காந்தி உள்ளிட்டோரை கைது செய்தனர் .தன்னிடம் 3 கோடி வாங்கி ஏமாற்றிய மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை வாங்கி தாருங்கள் என காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும், அவர் எதிர்பார்த்தபடி கைக்கு பணம் வராததால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜீவ்காந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு