மேலும் அறிய

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில் குழு அமைக்க வேண்டும் - நீதிமன்றம்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி  விவகாரத்தில் முதலீட்டாளர்களுக்கு தங்களது சொத்துக்களை விற்று பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய கோரி வழக்கு.

தமிழக முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதால் மாநில அளவில் ஒரு குழுவை அமைத்து நிவாரணம் தரலாம்நீதிபதி கருத்து.
அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கூறியதால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
 
நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பழனிச்சாமி ,பாலசுப்பிரமணியன், உள்ளிட்டோர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரையை தலைமையகமாக  கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர். 
 
இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை கோவில்பட்டி மதுரை பைபாஸ் மற்றும் திருச்சி தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன. நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி DTCP நகர் மற்றும் நகரமைப்பு இயக்குனரக அனுமதி பெற்று, குறைந்தபட்சம் 1000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்கிறோம். 
 
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி; பாதிக்கப்பட்டவர்கள்  பயன்பெறும் வகையில் குழு அமைக்க வேண்டும் - நீதிமன்றம்
மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட்டுக்குள் கட்டுகிறோம்.  இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டு அதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது. நிலங்கள் விற்பனைக்கு பிறகு வாடிக்கையாளர் பெயரில் பதிவு செய்து கொடுயப்படுகிறது.
 
NEOMAX GROUP இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட் திட்டங்களில் 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடியில் (2,249.565 ஏக்கர்)க்கான அரசு  ஒப்புதல் பெற்றுள்ளது. நாங்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்ட நில விற்பனை பத்திரத்தை ஒரு அளவிற்கு செயல்படுத்தியுள்ளோம். 15,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எங்களிடம் 4கோடியே 12லட்சத்து 65ஆயிரத்து 276.35 சதுர அடியில் (DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்) நிலங்கள் பத்திர பதிவு செய்ய தயாராக உள்ளன.
 
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி; பாதிக்கப்பட்டவர்கள்  பயன்பெறும் வகையில் குழு அமைக்க வேண்டும் - நீதிமன்றம்

குழு அமைக்க வேண்டும்

நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள் நிலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரிசெய்ய விரும்புவதாகவும், இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி; பாதிக்கப்பட்டவர்கள்  பயன்பெறும் வகையில் குழு அமைக்க வேண்டும் - நீதிமன்றம்
 
இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழக முழுவதும் உள்ளதால் மாவட்ட அளவில் குழுக்களை அமைப்பது பயனற்றதாகவே இருக்கும் எனவே மாநில முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில் குழு அமைக்க வேண்டும் இதற்கும் காவல்துறை நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை. ஆகையால் காவலர்கள் அவர்களது நடவடிக்கையை தொடரலாம் என கருத்து தெரிவித்தார். அப்பொழுது அரசு தரப்பில்  தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜராக கால அவகாசம் கூறியதால் வழக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget