மேலும் அறிய

புதுவை காலாப்பட்டு சிறையில் மயங்கிய விசாரனை கைதி பலி

புதுச்சேரி மத்திய சிறையில் மயங்கிய விசாரனை கைதியை மருத்துவமனை அழைத்து சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

புதுச்சேரி அருகே காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 74 தண்டனை கைதிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்னியா உத்தரவின் பேரில் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 12ஆம் தேதி நடந்த சோதனையில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் என்ற கைதியிடம் இருந்து ஒரு செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுவை காலாப்பட்டு சிறையில் 11 கைதிகள் தற்கொலை முயற்சி- ஆணிகளை விழுங்கியதால் பரபரப்பு...!

இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், குடும்பத்தினரை சந்திக்க விடுவதில்லை என கூறியும் 50க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 2 பிரிவாக பிரிந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இதற்கிடையே கடந்த சில தினங்கள் முன்பு 16 கைதிகள் சிறையில் உணவு அருந்தும் தட்டினால் கைகளை அறுத்தும், பினாயில் குடித்தும், ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

புதுவை காலாப்பட்டு சிறையில் மயங்கிய விசாரனை கைதி பலி

காரைக்கால் டவுன் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் (வயது 42). இவர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததால் இரு வேளையும் இன்ஸுலின் ஊசி செலுத்தி கொள்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மதியம் உடல் நிலை சரியில்லை என சிறை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், சிகிச்சையின் போது திடீரென மயங்கி விழுந்த அவரை சிறை காவலர்கள் அருகே இருந்த தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று மேல் சிகிச்சைக்காக  அனுமதித்தனர் ஆனால் அசோக் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

புதுவை காலாப்பட்டு சிறையில் மயங்கிய விசாரனை கைதி பலி

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் அசோக்குமார் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காலாப்பட்டு சிறையில் அடிக்கடி செல்போன் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்துவதாக கூறி அங்குள்ள கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அசோக்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை காலாப்பட்டு சிறையில் 11 கைதிகள் தற்கொலை முயற்சி- ஆணிகளை விழுங்கியதால் பரபரப்பு...!

தலைப்பு செய்திகள்

பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - விளக்கம் என்ன?
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Embed widget