பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
திருப்பத்தூரில் சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூரில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளிடம் பேட் டச் செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா ஜி ராவ் மகன் பாபு (54) என்பவரின் வீட்டின் அருகே 8 வயது மற்றும் 4 வயது என இரண்டு பெண் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், பாபு இரு குழந்தைகளும் வீட்டிற்கு அழைத்துச் சென்று பேட் டச் செய்து பாலியல் அத்துமீறல் ஈடுபட முயன்றுள்ளார். அந்த இரு குழந்தைகளும் பாபு வீட்டில் இருந்து புறப்பட்டு அவர்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். பின்னர் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவர் பாபு மீது வழக்கு பதிந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளிடம் பேட் டச் செய்து போக்சோ சட்டத்திற்கு கீழ் கைதான முதியவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
போக்சோ சட்டம்
இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும். இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















