மேலும் அறிய

பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...

மயிலாடுதுறை அருகே பூட்டிய வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே பூட்டியிருந்த வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, உள்ளே புகுந்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், மணல்மேடு காவல் நிலைய வரலாற்றுப் பதிவேடு குற்றவாளி உட்பட 3 பேரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த 12 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடப்பட்ட அனைத்துப் பொருட்களும் முழுமையாக மீட்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சம்பவத்தின் முழுமையான பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரக எல்லைக்கு உட்பட்ட இராதநல்லூர் கிராமம், மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி ராணி (வயது 48). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி (07.08.2026) அன்று இரவு தனது வீட்டை வழக்கம்போல் பத்திரமாகப் பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

மறுநாள் காலை (08.08.2026) ராணி தனது வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.

பதற்றத்துடன் வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 96 கிராம் எடை கொண்ட வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் புகார் 

தனது வீட்டில் நடைபெற்ற இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் குறித்து ராணி உடனடியாக மணல்மேடு காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்படி புகார் அளித்தார். அளித்த புகாரின் அடிப்படையில் மணல்மேடு காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று முதற்கட்ட தடயவியல் ஆய்வுகளையும் கள விசாரணையையும் மேற்கொண்டனர்.

தனிப்படை அமைப்பு

பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நடைபெறும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து திருடு போன சொத்துக்களை மீட்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, மணல்மேடு காவல்துறையினருக்குக் கடுமையான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

அவரது உத்தரவின் பேரில், மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிடப்பட்டது. மணல்மேடு காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலிசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மற்றும் பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர்.

12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள்  கைது

தனிப்படையினரின் தீவிரத் தொடர் விசாரணையில், மணல்மேடு காவல் நிலைய வரலாற்றுப் பதிவேடு (History Sheeter) குற்றவாளியான தாழ்சேரி, கொற்கை பகுதியைச் சேர்ந்த தங்கராசு மகன் ரஜினி (வயது 51) என்பவர் இக்குற்றச் சம்பவத்தில் முதன்மையாக ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ரஜினியைப் பிடித்துப் போலிசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தனது கூட்டாளிகளான திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் குமார் (வயது 34) மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் சுபாஷ் (வயது 29) ஆகியோருடன் இணைந்து இந்தத் திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது‌. 

திருடப்பட்ட சொத்துக்கள் மீட்பு மற்றும் சிறையிலடைப்பு

குற்றவாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட 96 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை காவல்துறையினரால் சேதமின்றி முழுமையாக மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ரஜினி, குமார் மற்றும் சுபாஷ் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்படி நீதிமன்றக் காவலுக்கு (Judicial Custody) உட்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்ட எஸ்பி பாராட்டு மற்றும் பொதுமக்கள் வரவேற்பு.

குற்றச் சம்பவம் நடந்த தகவலறிந்த குறுகிய காலத்தில், அதாவது 12 மணி நேரத்திற்குள்ளாகவே தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ததோடு, திருடப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீட்ட மணல்மேடு காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி தலைமையிலான மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படை மற்றும் மணல்மேடு காவல் நிலைய அதிகாரிகளின் சிறப்பான சேவையைப் பாராட்டி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா வெகுவாகப் பாராட்டினார்.

காவல்துறையின் இந்த அதிவிரைவான அதிரடி நடவடிக்கை இராதநல்லூர் மற்றும் மணல்மேடு சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும் நிம்மதியையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - விளக்கம் என்ன?
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
Embed widget