பேத்தியை கர்ப்பமாக்கி, குழந்தையை ஆற்றில் புதைத்த 70 வயது முதியவர் போக்சோவில் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தான் வளர்த்து வந்த பேத்தியிடம் வன்புணர்வில் ஈடுபட்டு கருகலைப்பில் ஈடுபட்டு குழந்தையை புதைத்த 70 வயது முதியவர் உட்பட 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (70). 20 ஆண்டுகளுக்கு முன்னர், இவரது மகள் பொன்னி உடன் ராஜா என்பவருடன் திருமணம் நடந்தது. பொன்னி-ராஜா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் பொன்னி இறந்துவிடவே, கணவர் ராஜா தனது இரண்டு பிள்ளைகளையும் ஊரிலேயே விட்டுவிட்டு, பெங்களூரில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வசித்து வருகிறார்.
உயிரிழந்த பொன்னியின் இரண்டு குழந்தைகளையும் தாத்தா முனியாண்டி வளர்த்து வந்த நிலையில் 70 வயது முதியவரான முனியாண்டி தனது 15 வயது பேத்தியுடன் கடந்த 3 ஆண்டுகளாக தகாத உறவில் ஈடுபட்டதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இச்சம்பவத்தை மறைக்கும் விதமாக வீட்டை விட்டு தனது பேத்தியை வெளியில் அனுப்பாமல் பார்த்து கொண்ட முதியவர் முனியாண்டி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி (65) என்பவரின் உதவியுடன் மணம்பூண்டி பகுதியில் வசிக்கும், ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி என்பவரிடம் கர்ப்பிணியாக இருந்த பேத்திக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். இதில் அச்சிறுமிக்கு, இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை முதியவர் முனியாண்டி தென் பெண்ணை ஆற்றில் புதைத்த தகவல் செல்லங்குப்பம் முழுக்க கசிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Pocso On Sivasankar | "பள்ளிக்கும் எனக்கும் தொடர்பில்லை.. ஜாமீன் கொடுங்கள்" - சிவசங்கர்
எனவே கிராம நிர்வாக அலுவலர் தாமாக முன்வந்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முதியவர் முனியாண்டி மீதும், அவருக்கு உறுதுணையாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த இந்திராணி என்பவர் மீதும், சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்த மணம்பூண்டி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி உள்ளிட்ட மூவர் மீதும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சொந்த தாத்தாவே பேத்தியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கி கருக்கலைப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய வழக்கப்பதிவு செய்து தண்டிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேச மறுத்ததால் கள்ளக்காதலியை கொன்ற 70 வயது முதியவர் கைது
செவ்வாய் தோஷம்... அவசரக்கல்யாணம்... வரதட்சணை கொடுமை: புதுமணப்பெண் தற்கொலை!