மேலும் அறிய
Advertisement
செவ்வாய் தோஷம்... அவசரக்கல்யாணம்... வரதட்சணை கொடுமை: புதுமணப்பெண் தற்கொலை!
திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை. வரதட்சனை கொடுமையால் தனது மகள் தற்கொலை தந்தை புகார் அளித்ததை அடுத்து கணவரிடம் விசாரணை
சென்னை பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சினேகா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிறது. சினேகாவும் பிரோத்தும் பள்ளிபருவம் முதலே காதலித்து வந்துள்ளனர். சினேகாவின் பெற்றோர் கலப்பு திருமணம் செய்தவர்கள். பிரமோத் ஸ்வேதாவிற்கு முறைமாமன், எனவே இருவரும் பள்ளி நாட்களிலே காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சினேகா பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி செல்ல இருந்த நிலையில், கடந்த வருடம் சினேகாவை பெண் பார்க்க பிரமோத் வீட்டினர் வந்துள்ளனர். அப்பொழுது பிரமோத் குடும்பத்தை சேர்ந்தவர்கள், மாப்பிள்ளை பிரம்மத்திற்கு செவ்வாய் தோஷம் துவங்க உள்ளதால், உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டும் இல்லையென்றால் 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கும் காரணத்தினால், உடனடியாக திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணை எதுவும் வேண்டாம் என கூறியுள்ளனர். இருந்தும் பெண் வீட்டார் 15 சவரன் நகை மற்றும் 2 1/2 லட்சம் ரூபாய் ரொக்கம் அளித்து திருமணத்தை கோவிலில் நடத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, சீர்வரிசை பொருள் சரியாக வரவில்லை, பெண்ணுக்கு சமைக்க தெரியவில்லை என்று மாப்பிள்ளை வீட்டார் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளனர்.
மேலும் பிரமோத் வரதட்சணையாக வந்த பணத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை வாங்கி சுற்றித்திரிந்து உள்ளார். மிச்சம் இருந்த பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்த பணம் நஷ்டம் ஆகி உள்ளது. இதனை தொடர்ந்து, பிரமோத் தனது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்து கொண்டு சேலையூர் ரங்கநாதன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். நேற்று முன்தினம் இரவு பிரமோத், செல்போனில் தொடர்பு கொண்டு சினேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சினேகா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சினேகாவின் பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சேலையூர் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சினேகாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion