பேச மறுத்ததால் கள்ளக்காதலியை கொன்ற 70 வயது முதியவர் கைது
என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஆளை ரெடி செய்து விட்டாயா என்று திட்டியவாறு முதியவர் மணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பழனியம்மாளை சரமாரியாக வெட்டினார்.
![பேச மறுத்ததால் கள்ளக்காதலியை கொன்ற 70 வயது முதியவர் கைது 30 years of stoning near Karur have come to an end பேச மறுத்ததால் கள்ளக்காதலியை கொன்ற 70 வயது முதியவர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/04/7051ee374566aa4a006e336509340608_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் சேவாப்பூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, இவரது மனைவி பழனியம்மாள் (55), விவசாய தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி (எ) மணி (70). பழனியம்மாளுக்கும், மணிக்கும் கடந்த 30 ஆண்டுகளாக தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக பழனியம்மாளுக்கும் மணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பழனியம்மாள், முதியவர் மணியிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. முதியவர் மணி பலமுறை பேச முயன்றும் பழனியம்மாள் அதனை கண்டுக் கொள்ளாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பழனியம்மாளிடம் பேசுவதற்காக அவரது வீட்டுக்கு, மணி நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்றார். அப்போதும் முதியவர் மணியிடம் பழனியம்மாள் பேச மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஆளை ரெடி செய்து விட்டாயா என்று திட்டியவாறு மணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பழனியம்மாளை சரமாரியாக வெட்டினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் இறந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் முதியவர் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னையால் 55 வயது பெண்ணை 70 வயது முதியவர் வெட்டிக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)