மேலும் அறிய
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் - இளைஞர்கள் கைது
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவிகள் மீது மது போதையில் இளைஞர்கள் தாக்குதல். மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதி.

கைது செய்யப்பட்டவர்கள்
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 2500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஒருங்கிணைந்த முதுகலை சமூகவியல் மூன்றாம் ஆண்டு மாணவியான சென்னையை சேர்ந்த தரண்யா வயது 23 மற்றும் கேரளாவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவியான தேவசந்தனா வயது 22 ஆகியோர் இரவு உணவு உண்பதற்காகவும் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காகவும் கங்களாஞ்சேரி கடைத் தெருவிற்கு வந்துள்ளனர்.
மாணவிகள் இருவரும் கங்களாஞ்சேரியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்து கொண்டு வெளியில் வந்த போது நான்கு இளைஞர்கள் மதுபோதையில் மாணவிகளை தாக்கியதுடன் செல்போனை பறித்துக் கொண்டு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். பயந்து போய் மாணவிகள் எதிரே உள்ள உணவகத்திற்குள் ஒடி நுழைந்துள்ளனர். உணவக உரிமையாளர் அவர்களை தட்டி கேட்டதற்கு அவரையும் தாக்கி அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் திருக்கண்ணபுரம் காவல்துறையினர் வண்டாம்பாளை பகுதியைச் சேர்ந்த கொத்தனார்களான வணிகராஜ் வயது 25 மற்றும் செல்லத்துரை வயது 27 ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலுக்குள்ளான மாணவிகள் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
நெல்லை
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion